HDFC Bank: 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் தடம் புரண்ட 13 கோடி... அதிர்ச்சியில் உறைந்த HDFC!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என்று வங்கி உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சென்னை தியாகராய நகர் பர்க்கிட் சாலையில் உள்ள எச்.டி.எப்.சி வங்கி கிளையில் இருந்து தவறுதலாக 100 வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு தலா ரூ.13 கோடி வரவாக வந்துள்ளது. திடீரென தங்களது வங்கி கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதை அறிந்த வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றதா என்று வங்கி உயரதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். 100 பேர் மட்டுமின்றி மேலும் சில வாடிக்கையாளர்கள் கணக்கில் ₹10,000, ₹50,000, ₹1 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழில்நுட்வ கோளாறு காரணமாகவே வாடிக்கையாளர்களுக்கு தவறான குறுந்தகவல் சென்றதாக HDFC வங்கி நிர்வாகம் தகவல் தெரிவித்து வருகிறது. தவறு நடந்திருப்பதை அறிந்தவுடன் 100 வங்கி கணக்குகளையும் தற்காலிகமாக முடக்கியது வங்கி நிர்வாகம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்