UPI ID-யில் சிக்கலா ? மாற்று வழி இதோ ! பணப் பரிவர்த்தனை இனி தடையில்லாமல் செய்யலாம்
UPI Apps மூலமாக , பணி பரிவர்த்தனை செய்யும் போது , Failure ஆவதை தடுப்பது எப்படி என்பதை காண்போம்.

UPI என்றால் என்ன ?
பெறுநரின் வங்கி விவரங்கள் தேவையில்லாமல், மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து வேறு எந்த வங்கிக் கணக்கிற்கும் , 24 மணி நேரமும் , விரைவாகவும் , எளிதாகவும் பணத்தை மாற்ற முடியும்.
UPI - யின் முக்கிய நன்மைகள் ;
1. வசதி மற்றும் எளிமை:
பணம் அல்லது கார்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எளிதாக பல வங்கிக் கணக்குகளை ஒரே பயன்பாட்டில் நிர்வகிக்கலாம். ஒருவர் கணக்கு விவரங்களை நீண்ட நேரம் நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் UPI ஐடி மூலம் பணம் செலுத்தலாம்.
2. உடனடிப் பரிவர்த்தனைகள்:
பணப் பரிமாற்றங்கள் நொடிகளில் உடனடியாக நடக்கும். பயன்பாடுகளை நிறுவுவது எளிது , மேலும் பாதுகாப்பான பரிவர்த்தனைகளுக்கு ஒரு மெய்நிகர் கட்டண முகவரி (VPA) உருவாக்கப்படுகிறது.
3. பல்வேறு பயன்பாடுகள்:
பில்கள் செலுத்துதல், கணக்குகளை நிர்வகித்தல் மற்றும் பணம் அனுப்புதல் , Ticket Booking செய்தல் போன்ற பல பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.
4. சலுகைகள்:
UPI பரிவர்த்தனைகளில் ரிவார்டுகள் மற்றும் கேஷ்பேக் போன்ற நன்மைகள் கிடைக்கின்றன.
5. தானியங்கி கட்டணங்கள்:
மாதாந்திர பில்களை தானாகவே செலுத்த UPI ஆட்டோ - பே அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
6. UPI Lite - Pin நம்பர் இல்லாம் பயன்படுத்தும் எளிய முறை:
UPI LITE என்பது 1,000 க்கும் குறைவான குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை விரைவாகவும் , PIN இல்லாத முறையிலும் செயலாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டண தீர்வாகும்.
UPI - ID யில் உள்ள பிரச்சனை
இப்போதெல்லாம் யு.பி.ஐ., வசதி இல்லையென்றால் எல்லோருக்கும் கை உடைந்தது போல் ஆகி விடுகிறது. சிறிய தொகையோ, பெரிய தொகையோ, எந்தவொரு பணப்பரி மாற்றத்துக்கும் , மொபைல் போனில் உள்ள UPI ஐ.டி., தான் கைகொடுக்கிறது.
ஆனால் , ஒரு சில சமயங்களில், பயன்படுத்தி வரும் வழக்கமான UPI ஐ.டி., பிரச்சனை கொடுக்கலாம். யு.பி.ஐ., நெட்வொர்க்கில் ஏதோ சிக்கல் வங்கியின் சர்வர் இயங்கவில்லை , இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்றெல்லாம் இடையூறு ஏற்படலாம். உங்கள் செயலியில் வங்கி இணைக்கப்பட்டு இருந்தால் , அதற்கு மாறி பணத்தை கட்டி விடலாம்.
ஆனால் ஒரே ஒரு வங்கியின் ஒரே ஒரு கணக்கோடு ஒரு UPI ஐ.டியை மட்டும் இணைத்திருந்தால் திண்டாடிப் போவார்கள். பையில் பணம் இல்லையென்றால் பொருளை வாங்கவும் முடியாது.
Back Up UPI - ID
பில் போட்டு விட்டு பணத்துக்காக காத்திருக்கும் கடைக்காரர் முன்பு கையாலாகாதவர் போல் நிற்க வேண்டியது தான். இந்தச் சிரமத்தை குறைப்பதாகவே, பேக் அப் UPI ஐ.டி., என்ற மாற்று வழி ஒன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதன்படி , பயனர் ஏற்கனவே வைத்துள்ள ஐ.டி.,யோடு கூடுதலாக அதே வங்கியில் பேக் அப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.
உதாரணமாக , ஒருவரது யு.பி.ஐ., - ஐ.டி., சங்கீத்@ யு.பி.ஐ., என்று இருப்பதாக வைத் துக் கொள்வோம். இப்போது அதே வங்கியில் சங்கீத்123@யு.பி.ஐ., என்று புதிதாக ஒரு ஐ.டி.,யை உருவாக்கினால் போதும். ஒரு வேளை முதல் ஐ.டி., ஏதோ ஒரு காரணத்தினால் இயங்கவில்லை என்றால் , யு.பி.ஐ., அமைப்பே இரண்டாவது ஐ.டி.,யை எடுத்துக் கொண்டு, அதன் வாயிலாக பணம் செலுத்தி விடும். இதனால் எந்தவித தடையின்றி UPI பயன்படுத்தலாம்.





















