மேலும் அறிய

"எங்கும் இருப்பவர் கடவுள்… அவருக்கு யாரும் இடம் கொடுக்கத் தேவையில்லை", சென்னை உயர்நீதிமன்றம்!

"தீவிரமான வெறி கொண்டவர்கள்தான் மதம் என்னும் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சம்பவங்களுக்கு வேர் காரணங்களாக உள்ளனர்."

"எங்கும் இருப்பவர் கடவுள், அவருக்கு யாரும் இடம் கொடுக்க தேவையில்லை, அதன் மீது தீவிரமான வெறி கொண்டவர்கள்தான் மதம் என்னும் பெயரால் மக்களை பிளவுபடுத்தும் சம்பவங்களுக்கு வேர் காரணங்களாக உள்ளனர்." பொது இடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலை அகற்றும் நடவடிக்கையை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து. "வழக்கு தொடுத்தவர், கோவில் கட்டவேண்டும் என்றால், நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை தவறாக ஆக்ரமித்து கட்டக்கூடாது, அது சாதி, மத, இன பேதமின்றி எல்லா மக்களும் பயன்படுத்துவதற்கான ஒதுக்கப்பட்ட பொது இடம்." என்று சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் நீதிபதி டி. பாரத சக்கரவர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

"வழக்கு தொடுத்தவர் விநாயகரை பக்தர்கள் அந்த இடத்தில் தொழுவதற்கான வசதிகளை செய்தே ஆகவேண்டும் என்று தீர்க்கமாக இருந்தால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்வதற்கான உரிமை அவருக்கு தாராளமாக உண்டு. அப்படியேதாவது நிலம் இருந்தால், அங்கு கோயில் கட்டி இடத்தை மாற்றிக்கொள்ளலாமே" என்று நீதிபதிகள் கூறினர். 

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்திருக்கும் விநாயகர் கோயிலை அகற்றுவதாக வந்த நோட்டிசிற்கு எதிராக எஸ். பெரியசாமி என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அவரே அந்த கோயிலின் அறங்காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நீதிமன்றத்தில் இந்த கோயில் அந்த இடத்தில் 30 வருடங்களாக இருக்கிறது என்றும் அது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் செய்ததில்லை என்றும் கூறியுள்ளார்.

அதனை மறுத்து கூறிய நீதிமன்றம், "அந்த இடத்தில் கோயில் 30 வருடங்களுக்கு மேலாக இருப்பதாகவே இருக்கட்டும், அந்த நிலமும் கோயிலுக்கு சொந்தமானதாகவே இருக்கட்டும், ஆனால் அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து வழக்கை நிரூபிப்பதில் என்ன தடை உங்களுக்கு?" என்று கேள்வி எழுப்பியது. அவற்றை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியும் அவரால் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.

வழக்கு தொடுத்தவர் கூறுவது போன்று அந்த இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்றும், அதனால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்றும் கூறும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது. பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்னும் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, கவலையளிக்கும் விதமாக அவரால் அந்த கோயில் அறங்காவலுக்கு சொந்தமானதுதான் என்று நிரூபிக்கக் கூடிய ஆவணங்களை நீதிமன்றத்தில் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. அதற்காக இவரது வழக்கை ஏற்றுக்கொண்டு கோயில் இயங்க அனுமதி அளித்தால், எல்லோரும் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்று காரணம் கூறி ஆக்கிரமிப்புகள் நடத்தும் வாய்ப்புகள் நிறைய உள்ளன" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget