கடலூரில் விநாயகர் கோயில்கள் மூடப்பட்டதால் களையிழந்த விநாயகர் சதுர்த்தி...!
’’விநாயகர் சிலை செய்யும் தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5000 வழங்கப்படும் என முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார்’’
விநாயகர் சதர்த்தி பண்டிகையை கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கொண்டாட முடியாமல் போனது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள காரணம் காட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொண்டாட தடை விதித்தனர் இருப்பினும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியினை கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படும் நிலையில் விநாயகர் சிலைகளை பொதுவெளியில் வைக்க மற்றும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கடலூரில் பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைக்கவும், பொதுமக்கள் ஒன்றாக கூடி நீர்நிலைகளில் கரைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது ஆனால் தனிநபர்கள் நீர்நிலைகளுக்கு சிலைகளை எடுத்து சென்று கரைப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். இவ்வாறாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதினால் கடலூரில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கலையிழந்து காணப்பட்டது. அதனால் இன்று மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் புதுப்பாளையம் பகுதியில் உள்ள இரட்டை பிள்ளையார் ஆலயங்கள் இன்று திறக்கப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் ஶ்ரீ வளம்புரி விநாயகர் கோவில் மட்டும் திறக்கப்பட்டு இருந்தது.
ஆனால் அங்கும் மக்கள் பெரிதளவில் வழிபாடு செய்ய வராததால் கோவில் கலையிழந்து காணப்பட்டது. சென்ற ஆண்டு கூட பெரிதளவில் கொண்டாட்டங்கள் இல்லை என்றாலும் கோவில்களில் மக்கள் வழிபாடு செய்தனர் ஆங்காங்கே ஒரு சில இடங்களிலாவது விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது, ஆனால் இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு முண்பிலுறுந்தே தமிழக அரசு சிலைகள் செய்ய தடை விதித்தால் இன்று எங்கும் சிலைகள் வைக்காமல் அரசின் உத்தரவின் படி விநாயகர் சதுர்த்தியானது மிகவும் அமைதியான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த முறை பெரிய அளவிலான விநாயகர் சிலைகளுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால் சிறிய விநாயகர் சிலைகளின் விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் காலையிலிருந்து தற்பொழுது வரையில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வதற்காக செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளும் பெரிதாக விற்பனை ஆகாத காரணத்தினால் வியாபாரிகளும் பெரும் கவலை அடைந்துள்ளனர். அரசின் உத்தரவின் படி விநாயகர் சதுர்த்தி திருவிழா அமைதியாக கொண்டாடப்பட்டு வந்தாலும் , இதனால் விநாயகர் சிலை செய்பவர்கள் மற்றும் விநாயகர் சிலைக்கு என குடை, பெரிய விநாயகர் சிலைகளுக்கு மாலை செய்பவர்கள் மற்றும் சிலைகளுக்கு பிரசாதம் செய்பவர்கள் என வெகுஜன மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 5000 ரூபாய் என மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.