Accident: பெரும் சோகம்.. நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்- வேன்.. 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழப்பு..!
லட்சுமி நாராயணபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சித்தாமூர் செய்யூர் பிரதான சாலையில், லட்சுமி நாராயணபுரம் என்ற இடத்தில் நடைபெற்ற வாகன விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கார் - வேன் மோதல்:
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே காரில் 5 பேர் பயணம் செய்தனர். அதே சாலையில் செய்யூரில் இருந்து உத்திரமேரூருக்கு தனியார் நிறுவனத்திற்கு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டு, வந்த வேன் லட்சுமி நாராயணபுரம் என்ற இடத்தில் , காரும் வேணும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காரில் பயணம் செய்த 5 பேரில் புருஷோத்தமன், சக்திவேல், குருமூர்த்தி என்பவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த வெங்கட் மற்றும் ரகு இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வெங்கட் உயிரிழந்தார். படுகாயம் ஏற்பட்ட ரகுவை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெரும் சோகம்:
வேனில் பயணம் செய்த 8 பேரில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை, காரில் சென்ற ஐந்து பேரும் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், இவர்களில் ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், வைக்கப்பட்டுள்ளது. விபத்து நடைபெற்ற சாலையானது தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை இல்லை, கிராம வழி சாலை என்பதால், இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து செய்யூர் காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்