போக்சோ சட்டம் வந்த பிறகும் பாலியல் தொல்லை தமிழகத்தில் அதிகம் - முன்னாள் அதிமுக அமைச்சர் பேச்சு
போக்சோ சட்டம் வந்த பிறகும் பாலியல் தொல்லை தமிழகத்தில் அதிகம் உள்ளது - அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு
சென்னை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் கொளப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் கே.பி கந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அதிமுகவில் நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கினார். மேலும் கட்சி நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். இந்த நிலையில் கட்சி நிர்வாகிகளுக்கு மண்டபத்தின் பின்பகுதியில் பிரியாணி சமைக்கும் பணி நடந்து வந்த போது திடீரென புகை மண்டபத்திற்குள் வந்ததால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட காட்சி நிர்வாகிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
பின்னர் அவர் அளித்த பேட்டியில்:
தமிழகத்தில் அதிமுகவில் அதிக உறுப்பினர்களை சேர்த்த மாவட்டம் இந்த மாவட்டம். வரும் தேர்தல் சட்டமன்றத்திற்கான ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் எடப்பாடி பழனிச்சாமி வியூகம் வெற்றி பெறும். யாரையோ திருப்தி படுத்துவதற்காக இந்த ஆட்சியின் சார்பில் கார் ரேஸ் நடத்தப்பட்டுள்ளது. யாருக்கும்
பயன்படாத இந்த திட்டங்களை தவிர்த்து மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
போக்சோ சட்டம் வந்த பிறகும் பாலியல் தொல்லை தமிழகத்தில் அதிகம் உள்ளது. மது போதையில் பாதிக்கப்படுவது கள்ள சாராயம் விற்பனை அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதனை எதிர்த்து அதிமுக குரல் கொடுத்து வருகிறது 2026 ஆட்சி மாற்றம் தான் இதற்கு ஒரே தீர்வு.
கூட்டம் நடந்து கொண்டிருந்த போது மண்டபத்திற்குள் புகை வந்தது, புகை என்றால் கண்ணை கசக்குவார்கள் என்று பார்த்தால் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்தார்கள். கூட்டம் தொடங்கியது முதல் கட்சி நிர்வாகிகள் சேரில் இருந்து எழுந்திருக்காமல் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என வாழ்த்து தெரிவித்தார்.
நெருப்பு ஆற்றில் நீந்தி வந்த இயக்கம் அதிமுக. மக்கள் நேசிக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான். எத்தனையோ கட்சிகள் வரலாம் போகலாம் வரலாற்றில் இடம் பெற முடியாது. நான்கு தொகுதிகள் இருந்தால் முதல் பரிசு வந்திருப்பீர்கள் எனது மாவட்டத்தில் நான்கு தொகுதி என்பதால் நான் முதலிடம் வந்து விட்டேன். கபடி போட்டி போன்று நாலு நல்ல பிளேயரை வைத்து வெற்றி பெற வேண்டும். எந்த திமுகவினர் மகிழ்ச்சியாக உள்ளார்கள் மந்திரிகளை தவிர , சட்டசபை கேண்டினில் அமர்ந்து சாப்பிடும் போது அடுத்து நீங்கள் தான் என நம்மிடமே சொல்கிறார்கள்.
உங்க ஆட்சியில் தான் நன்றாக இருந்தது என்ற குரல் எல்லா பக்கமும் கேட்கிறது. கடைசி மூன்று மாதத்தில் அலை வரும் அந்த அலையில் இலை வரும்.
ஆளுநர் கையெழுத்து போடாமல் சட்டத்தை நிறைவேற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி. எட்டு ஆண்டுகள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஆணை வாங்கியவர்கள் எனக்கு மெசேஜ் அனுப்பினார்கள் ஒன்பதாவது ஆண்டில் 7 1/2 சதவீதம் இட ஒதுக்கீட்டில் ஆணை வாங்கியவர்கள் காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர் எனப் பேசினார்.