Chennai: அதிவேகமாக வந்து மோதிய லாரி.. மகன் கண்முன்னே தந்தை உயிரிழப்பு.. சென்னையில் பரிதாபம்..!
சென்னையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிநாதம் (50). இவர் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவருடைய மகன் சிவபிரசாத். இவர்கள் இருவரும் நேற்று மாலை தாம்பரத்தில் உள்ள துணிக்கடைக்கு சென்று துணி எடுத்துவிட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
லாரி மோதி தந்தை உயிரிழப்பு
மேற்கு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள தனியார் பள்ளியை கடந்து வந்த கொண்டிருந்தபோது, இவர்கள் பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று அவர்கள் வண்டியின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முனிநாதம், சம்பவ இடத்திலேயே மகன் கண்முன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த சிவபிரசாத், மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இது குறித்து குரோம்பேட்டை புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்






















