கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்களா ? அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதில்
கொளத்தூரில் , போலி வாக்காளர்கள் இருந்தால் தேர்தல் ஆணையத்திடம் சொல்லி நீக்க சொல்லுங்கள் யார் வேண்டாம் என்று தடுத்தார்கள் - சேகர்பாபு

வண்ண மீன்கள் வர்த்தக மையம் ஆய்வு
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பாக வில்லிவாக்கம் பாடி மேம்பாலத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் கொளத்தூர் வண்ண மீன்கள் வர்த்தக மையத்தை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது ;
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகே 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன மீன் அங்காடியில் 188 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மீன் அங்காடியில் 4 சக்கர வாகனங்கள் 200 நிறுத்தும் வகையிலும் 2 சக்கர வாகனங்கள் 200 நிறுத்தும் அளவிலும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மீன் அங்காடி - 20 ம் தேதி திறப்பு
மேலும் இந்த மீன் அங்காடியில் மொத்தமாக 18 கழிப்பறைகள் உள்ளது. அதில் 9 கழிப்பறைகள் பெண்களுக்கும் 2 கழிப்பறைகள் மாற்றுத் திறனாளிகளுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மீன் அங்காடியில் மொத்தமாக 5 லட்சம் கொள்ளவு கொண்ட நீர் தேக்க தொட்டி உள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் இந்த மீன் அங்காடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த மீன் அங்காடியை வருகின்ற 20 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை திறந்து வைப்பார் எனவும் இந்த மாதம் இறுதியில் இங்கு உள்ள கடைகள் உற்பத்தியாளர்கள் இடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளில் வருகின்ற ஜனவரி மாதத்திற்குள் 75 சதவீம் பணிகள் முடிக்கப்படும் எனவும் , வடசென்னை பகுதிகளில் 80 சதவீதம் மழை நீர் வடிகால்வாய் பணிகள் முடிந்துள்ளது. ஒரு சில பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது என கூறினார்.
பருவமழை காலத்தில் சென்னை மக்கள் படகுகளை தயாராக வைத்து கொள்ளுங்கள் என அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தது குறித்தான கேள்விக்கு
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போலும் , காமாலை கண் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அது போல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகளை தயார் செய்து வைத்தால் அதற்கும் குறை கூறுவார்கள் வந்த பிறகு தேவை என்றால் முன் கூட்டியே கையாளவில்லை என அதற்கும் குறை கூறுவார்கள் குறை கூறுபவர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. அதை எல்லாம் பொறுத்படுத்தாமல் நாங்கள் தொடர்ந்து எங்களது பணிகளும் மேற்கொண்டு வருகிறோம்.
திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா பணிகள் எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு ;
திருச்செந்தூரில் கந்த சஷ்டி பெருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த முறை காட்டிலும் இந்த முறை பயணிகளுக்கு சிறப்பான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்தான கேள்விக்கு ;
நல்ல வேலை 264 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று சொல்லாமல் விட்டு விட்டார். அவர் கணக்கில் எப்போதும் பிழையாக இருப்பவர் அவரது கணக்கு பொய் கணக்காகவும் சட்டமன்றத் தேர்தலில் யோகோபித்த ஆதரவோடு முதலமைச்சர் நிச்சயம் ஆட்சியில் அமருவார் என தெரிவித்தார்.
கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் உள்ளார்கள் என பாஜக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளது குறித்தான கேள்விக்கு
அவர்கள் என்ன சொன்னாலும் கேட்கின்ற ஆணையம் தேர்தல் ஆணையம் எனவும் , அவ்வாறு இருந்தால் சொல்லி நீக்க சொல்லுங்கள் யார் வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
நிச்சயம் போலி வாக்காளர்கள் கள்ள வாக்குகளில் துளி அளவும் விருப்பமில்லாதவர் எங்கள் முதலமைச்சர் எனவும் , ஆட்சி அமைப்பதற்கு ஒரு சூழல் வருகின்ற போது கூட குறுக்கு வழியில் வேண்டாம் தேர்தல் சந்தித்து ஆட்சியை அமைப்போம் என கூறிய முதல்வர் எங்கள் முதல்வர். போலி வாக்காளர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை எனவும் தெரிவித்தார்.





















