மேலும் அறிய
Advertisement
சென்னையில் திடீரென்று தரை இறங்கிய விமானம்; இறுதியில் நடந்த சோகம்
பிரசவ வலி ஏற்பட்டதால் சென்னை விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது.
துருக்கி நாட்டிலிருந்து மலேசியாவிற்கு 326 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஒரு பெண் பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் விமானம் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. குழந்தை இறந்து பிறந்ததால், அந்த பெண்ணை சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து, துருக்கிஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக (B77W) TK 60 என்ற பயணிகள் விமானம், இஸ்தான்புல் விமானநிலையத்திலிருந்து மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று அதிகாலை 3:20 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 326 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர்.
இந்த விமானம் மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண், பிரசவ வலியால் அவதிப்பட்டார். இதை அடுத்து விமான கேப்டன், உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார்.
இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன், இந்த விமானம் மதியம் 1:50 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அந்த பெண்ணை பரிசோதித்த போது, அந்த பெண்ணுக்கு குறை பிரசவம் ஏற்பட்டு, குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதை அடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டனர். அந்த பெண்ணுக்கும் அவருடன் வந்த ஒருவருக்கும் மட்டும் அவசரகால மருத்துவ விசா அளித்தனர்.
அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒருவரையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடலை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதை அடுத்து அவசரகால மருத்துவ விசா கொடுக்கப்பட்ட இரண்டு பேரை தவிர மீதி 324 பயணிகள் மற்றும் அந்த பிறந்து இறந்த சிசுவின் உடலுடன் துருக்கீஸ் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion