மேலும் அறிய
தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில்கள் நாளை ரத்து!
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது

மின்சார ரெயில்
தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் மற்றும் தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் 75க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள்.

சென்னை, தாம்பரம் ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் நாளை ரத்து செய்யப்படவுள்ளது. பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சென்னை தாம்பரம் ரயில்வே பாதையில் ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அதற்கேற்றார்போல் பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் 29-ந்தேதி (நாளை) ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட உள்ள ரயில்களின் விவரம் ,சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணி, காலை 11.45 மணி, தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.50 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.


தாம்பரம்-கடற்கரை இடையே காலை 10.20 மணி, 11.30 மணி, மதியம் 12.10 மணி, 12.30 மணி, 1.50 மணி, செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15 மணி, 11 மணி, மதியம் 12.25 மணி, மற்றும் காஞ்சீபுரம்-கடற்கரை இடையே காலை 8.45 மணி, திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் எழும்பூர்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேலும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12 மணி, 1.20 மணி, 2 மணி மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11.30 மணி, மதியம் 12.20 மணி, 12.40 மணி, 1.40 மணி, 2.30 மணி, கடற்கரை-அரக்கோணம் இடையே மதியம் 1 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து புறப்படும். இவ்வாறு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement