மேலும் அறிய

ரயில் பயணிகள் கவனத்திற்கு !! கடற்கரை - தாம்பரம் இடையே மீண்டும் ரயில் சேவையில் மாற்றம் !!

பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை-செங்கல்பட்டு வழித் தடத்தில் இன்று முதல் மீண்டும் மின்சார ரெயில் சேவை குறைப்பு.

மறுசீரமைப்பு பணிகள்

சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணியின் ஒரு பகுதியாக, 10, 11 ஆகிய நடைமேடைகளில் நடைமேம்பால அடித்தளப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் கடந்த பிப்ரவரி 20 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரை 44 மின்சார ரெயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இம்மார்க்கத்தில் இதர மின்சார ரெயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள், எழும்பூர் ரெயில் நிலைய 5 வது நடைமேடை வழியாகவும், செங்கல்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்படும் மின்சார ரெயில்கள் எழும்பூர் ரெயில் நிலைய 6 வது நடைமேடை வழியாகவும் இயக்கப்படுகின்றன.

ரயில் சேவைகள் குறைப்பு

இவ்வாறு நடைமேடைகள் மாற்றப்பட்டதால் தண்டவாளங்களைப் கடப்பது மற்றும் சிக்னல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இரு மார்க்கத்திலும் மின்சார ரெயில்கள் தாமதமாகின்றன. முன்னதாக இயக்கப்பட்ட 204 ரெயில் சேவைகள், 164 ரெயில் சேவைகளாக குறைக்கப்பட்டது. மேலும், மின்சார ரெயில்கள் வேகம் குறைத்தும், தண்டவாள மாற்ற சிக்னலுக்காக நிறுத்தப்பட்டும் இயக்கப்படுகின்றன. ரெயில் சேவை குறைக்கப்பட்டாலும், 30 முதல் 45 நிமிடம் வரை ஆங்காங்கே ரெயில்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்பட்டது.

இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ரெயில் சேவைகளை சீராக இயக்க ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 164 ரெயில் சேவையில் இருந்து 115 ரெயில் சேவைகளாக குறைப்பது உள்பட சில மாற்றங்களை தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு ; 

1. எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை 10, 11-ல் நடைபெறும் மறுசீரமைப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாற்றம் இன்று ( செவ்வாய்க் கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. வருகிற ஏப்ரல் 5 ம் தேதி வரையில் அமலில் இருக்கும். கடற்கரை - செங்கல்பட்டு வழித் தடத்தில் 58 மின்சார ரெயில் சேவைகளும், மறு மார்க்கமாக செங்கல்பட்டு - கடற்கரை வழித்தடத்தில் 57 மின்சார ரெயில் சேவைகளும் என மொத்தம் 115 ரெயில் சேவைகள் இயக்கப்பட உள்ளது.

2. சென்னை கடற்கரை - தாம்பரம் - சென்னை கடற்கரை வழித்தடத்தில் இரு மார்க்கமாகவும் பீக் அவர்ஸ் இல்லாமல் சாதாரண நேரத்தில் இயக்கப்பட்ட ஏ.சி. மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

3. கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்பட்ட மின்சார ரெயில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

4. திருமால்பூர்-அரக்கோணம், சென்னை கடற்கரை-அரக்கோணம் விரைவு மின்சார ரெயில்கள் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

5. செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையேயான விரைவு மின்சார ரெயில்கள் (செமி பாஸ்ட்) (40402, 40404, 40405) பரங்கிமலையில் நின்று செல்லும்.

6. சில மின்சார ரெயில்கள் சென்னை எழும்பூர்-பரங்கிமலை, எழும்பூர்-கூடுவாஞ்சேரி, எழும்பூர்-செங்கல்பட்டு என இரு மார்க்கமாகவும் இயக்கப்பட உள்ளன என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
செல்போன் ஆப் மூலம் பெண் அறிமுகம் !! தனிமையில் சந்திக்க சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி !
Chennai Metro: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு! நந்தனம் நுழைவாயில் மூடல் - மாற்று வழிகள் இதோ
Chennai Metro: சென்னை மெட்ரோ முக்கிய அறிவிப்பு! நந்தனம் நுழைவாயில் மூடல் - மாற்று வழிகள் இதோ
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
மாமனார் - மருமகள் கள்ளத் தொடர்பு !! 5 மாத குழந்தைக்கு ஏற்பட்ட கொடூர சம்பவம்
TVK vs DMK ; பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டப்படும் - சேகர்பாபு அதிரடி
TVK vs DMK ; பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டப்படும் - சேகர்பாபு அதிரடி
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |
Trichy Goverment Hospital | ”குழந்தை உயிர் போயிருச்சே” கதறி அழும் பெற்றோர்! அரசு மருத்துவமனை அவலம்
Parthiban Apology | ”நான் சாதி பார்க்குறவனா? வாய் தவறி பேசிட்டேன்” பார்த்திபன் அந்தர்பல்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
ஜஸ்டில் ஜெயிச்ச எம்.எல்.ஏ.க்கள்.. கருணாநிதி முதல் துரைமுருகன் வரை - யார்? யார்?
Tata Cars Price Hike 2026: நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
நீங்க டாடா கார் வாங்குற பிளான்ல இருக்கீங்களா.? அப்போ உடனே ஓடுங்க.. ஏப்ரல் 1-ம் தேதி விலை உயருது
Iran Rejects Trump's Offers: “உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
“உங்க சலுகையும் வேணாம், போரையும் முடிக்க முடியாது“; கொந்தளித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
குழந்தை வரம் தரும் கொடுமுடி மகுடேஸ்வரர் கோயில்: வேண்டுதல் நிறைவேறும் அதிசயம்!
Thirumavalavan Speech: “போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
“போராடி தான் தொகுதி வாங்க வேண்டியிருக்கு“; நேரலையில் தொண்டர்களிடம் பேசிய திருமாவளவன்
ஆசியக் கோப்பை பாணியில்
ஆசியக் கோப்பை பாணியில் "யூரோ நேஷன்ஸ் கோப்பை"! திட்டத்துடன் களமிறங்கிய அயர்லாந்து
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
Air India: தவறான விமானம், டேக்-ஆஃப் செய்த ஏர் இந்தியா, 4 மணி நேரம் கழித்து வானிலேயே U-டர்ன் - குழம்பிய பயணிகள்
GOLD SILVER RATE Mar. 21st: அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?
அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?
Embed widget