EPS: விஜயின் அதிரடி பேச்சு... எடப்பாடி பழனிசாமியின் ரியாக்ஷன் என்ன?
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை புதிய கட்சி நிர்வாகிகள் எல்லாம் உச்சரிக்கும் அளவுக்கு , அதிமுக வளர்ச்சி அடைந்த கட்சி என்பதை வெளிப்படுத்துகிறது.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய பழனிசாமி
அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த நலிவடைந்த 167 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலநிதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் என்பது ஆயிரத்துக்கும் அதிகமாக காலியாக உள்ள நிலையில், ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டு இருப்பதாக கூறினார். தமிழக மாணவர்களின் நலன் கருதி, காலியாக உள்ள ஒட்டு மொத்த உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கும் அறிவிப்பானை வெளியிட்டு காலிப்பணியிடங்கள் முழுமையும் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
பேராசிரியர்கள் நிரப்பப்படவில்லை
திமுக ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் முறையாக நிரப்பப்படுவதில்லை என்றும் தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகவும், தீபாவளி பண்டிகைக்கு இரண்டு நாட்களில் உள்ள நிலையில் அவர்களுக்கு முன்கூட்டியே ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 9 செயற்கை உள்துறை கால்பந்தாட்ட விளையாட்டு தேடலை தனியார் மையமாகும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும்.
விஜய் மாநாடு - ரசிகர்கள் உறுதுணை
விஜய் மாநாடு குறித்து கருத்து தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , விஜய் நடத்திய மாநில மாநாட்டுக்கு அவரது ரசிகர்கள் உறுதுணையாக இருந்துள்ளனர். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை புதிய கட்சி நிர்வாகிகள் எல்லாம் உச்சரிக்கும் அளவுக்கு , அதிமுக வளர்ச்சி அடைந்த கட்சி என்பதை வெளிப்படுத்துகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 41 மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு 63 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தொடங்கியதாகவும் , ஆனால் திமுக அரசு அதை விரைவு படுத்தவில்லை என்றும், ஆயிரம் கோடி ரூபாயில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்காவை தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டியதாகவும், இதுவரை திமுக அரசு அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவேற்ற வில்லை என்றும், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய திட்டங்கள் என அனைத்து திட்டங்களையும் திமுக அரசு கிடப்பில் போட்டு முடக்கி விட்டனர்.
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் சாதனைகளையும், திமுகவின் மக்கள் விரோத செயல்களையும் வெளிப்படுத்தி தேர்தலை சந்தித்து 2026 சட்டமன்றத்தில் தேர்தலில் சமூகமாக வெற்றி பெற்று , மக்களுக்கு தேவையான திட்டங்களைக் கொண்டு வந்து, போதைப் பொருள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த அதிமுக பாடுபடும் என்றும் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.