Train Cancel: சென்னை மின்சார ரயில்கள் ரத்து..! பயணிகளே இதை கொஞ்சம் கவனிங்க ..! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் லிஸ்ட்!
Chennai Beach - Tambaram - Chengalpattu Train : சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவைகள் மாற்றம் , அதேபோன்று பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு சில ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்படுகிறது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள்
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் சென்னைக்கு மிக முக்கிய போக்குவரத்து சேவையாக உள்ளது. சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். செல்வதே விட ரயிலில் செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும். அதே போன்று ரயில் கட்டணமும் மிகக் குறைவு என்பதால் வேலைக்கு செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.
பராமரிப்பு பணிகள்
ஒவ்வொரு முறையும் மின்சார ரயில்கள் செல்லும் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளார்கள். பொதுவாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பொழுது முடிந்த அளவிற்கு மின்சார ரயில்கள் பாதிப்படையாமல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் திட்டமிடும். அப்படி ஒரு சில சமயங்களில் முறையாக, தவிர்க்க முடியாத காரணத்தினால் ரயில்கள் வந்து செய்யப்படும் அல்லது தாமதம் முன்னேற்றத்தை குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தல் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தற்பொழுது ரயில் பாதைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே, இரவு நேரங்களிலும் மற்றும் அதிகாலை நேரங்களிலும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவைகள் மாற்றம். அதேபோன்று பல ரயில்கள் ரத்து செய்வதும், ஒரு சில ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்படுகிறது.
சென்னை ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பூங்கா ரயில் நிலையத்தில் இன்று இரவு 11:20 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால் இந்த தடத்தில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பகுதி ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்
செங்கல்பட்டு சென்னை கடற்கரை 10:10 மணி ரயில் இன்று தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்
செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இரவு 11 மணி ரயில் இன்று இரவு எழும்பூர் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை அதிகாலை 3:55 மணி ரயில் நாளை அதிகாலை எழும்பு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்
சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை அதிகாலை 3:55 மணி ரயில் இருபதாம் தேதி காலை எழும்பு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை அதிகாலை அதிகாலை 4 :35 மணி ரயில் இருபதாம் தேதி காலை எழும்பு ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரவு ரயில்கள் 10:40 ,11:20,11:40 ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இரவு நேரத்தில் இயக்கக்கூடிய, 9:30,11:30,11:59 மற்றும் அதிகாலை 4:15 மணிக்கு இயக்கக்கூடிய ரயில் சேவைகள் இன்று இரவு மற்றும் நாளை காலை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை கடற்கரை செல்லும் இரவு ரயில்கள் 10:40 ,11:20,11:40 ஆகிய ரயில்கள் நாளையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இரவு நேரத்தில் இயக்கக்கூடிய, 9:30,11:30,11:59 நாளை ரத்து செய்யப்படுகிறது
சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை அதிகாலை 4:15 மணிக்கு இயக்கக்கூடிய ரயில் சேவைகள் வருகின்ற இருபதாம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது