(Source: ECI/ABP News/ABP Majha)
kiruthiga udhayanidhi | உங்க டாய்லெட் கதை என்ன ? - கிருத்திகா உதயநிதி பகிர்ந்த கழிவறை அனுபவங்கள்!
”நான் பலமுறை யாரென்றே தெரியாதவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று , கதவை தட்டி கழிவறைகளை பயன்படுத்தலாமா என கேட்டிருக்கிறேன்.”
தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அறியப்படுபவர் கிருத்திகா உதயநிதி. முதல்வர் ஸ்டாலினின் மருமகளும் , உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா அண்மையில் வீடியோ ஒன்றினை பகிர்ந்திருக்கிறார். அதில் பயணத்தின் போது தனக்கு கழிவறைகளை பயன்படுத்துவதில் இருந்த சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். பொதுக்கழிவறைகளை மேம்படுத்துவதற்கான அரசு, தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வருகிற ஏப்ரல் 2, 3 ஆம் தேதிகளில் சென்னையில் “டாய்லெட் எக்ஸ்போ” நடைபெற இருப்பதாகவும் அதில் அனைவரும் தவறாமல் கலந்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
View this post on Instagram
கிருத்திகா உதயநிதி பகிர்ந்த விஷயங்கள் பின்வருமாறு :
”சின்ன வயசுல இருந்தே எனக்கு பயணம் செய்ய மிகவும் பிடிக்கும். எங்க அப்பா அம்மாவோட நிறைய சாலை வழி பயணம் போவேன் . எனக்கு இப்போ வரைக்கும் ஊர் சுத்த ரொம்ப பிடிக்கும். பயணம் செய்யுறது நல்ல அனுபவமாக இருந்தாலும் , எல்லோரும் சந்திக்கிற மோசமான அனுபவம் இந்த கழிவறைகள் பயன்படுத்துவதுதான். நாம எல்லோருமே பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்த தயங்குவோம். நான் பலமுறை யாரென்றே தெரியாதவர்கள் வீட்டிற்கெல்லாம் சென்று , கதவை தட்டி கழிவறைகளை பயன்படுத்தலாமா என கேட்டிருக்கிறேன். இதற்கெல்லாம் தீர்வாகத்தான் அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து இப்போ விழிப்புணர்வு முகாம் ஒன்று நடத்தவுள்ளோம். இது வருகிற ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை சாந்தோம் உயர்நிலை பள்ளியில் நடைபெறவுள்ளது. இதுல நிறைய பேர் பங்கெடுத்து , பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக எப்படி கொண்டு வரலாம், என்ன மாதியாக கொண்டு வந்தால் நடைமுறைக்கு பயனுள்ளதாக இருக்கும் போன்ற பல ஐடியாக்கள் இந்த விழிப்புணர்வு டாய்லட் எக்ஸ்போவில் நடைப்பெறவுள்ளது.எல்லோரும் உங்களது மோசமான கழிவறை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளுங்க, மறக்காமல் எக்ஸ்போவில் கலந்துக்கொள்ளுங்கள் ”என தெரிவித்துள்ளார்.
View this post on Instagram