மேலும் அறிய
சிக்கன்.. மட்டன் பிரியாணி! தடபுடலாக போலீசாருக்கு விருந்து வைத்த டிஜிபி! காரணம் இதுதான்!
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற்ற காவல் துறையினருக்கு டிஜிபி விருந்து வழங்கினார்.

காவல் துறையினருக்கு டிஜிபி விருந்து வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 12 நாட்கள் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2,000 செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடினர். சர்வதேச போட்டியாளர்கள் மற்றும் நடுவர்கள் உள்ளிட்டோர் ,கலந்து கொண்டதால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 4000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்களின் பாதுகாப்புக்காக அவர்கள் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டல், அவர்கள் ஓட்டல்களில் இருந்து போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து செல்லும் பஸ்கள், போட்டி நடைபெறும் ஓட்டல் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போட்டி நடந்து கொண்டிருந்த பொழுது டிஜிபி நேரில் சென்று அவ்வப்பொழுது ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய போலீசார்களை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார். நல்ல முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தமிழக போலீசுக்கு சர்வதேச அளவில் நன்மதிப்பை பெற்று கொடுத்தமைக்கு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புகழாரம் சூட்டி பேசினார். காவல்துறையினர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டதால் எந்த வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை எனவே பாதுகாப்பில் ஈடுபட்ட ஒவ்வொரு காவல்துறையினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார். பிறகு அனைத்து போலீசாருக்கும் மட்டன் பிரியாணி விருந்து வழங்கி அவர்களுடனே அமர்ந்து சாப்பிட்டார். இதில் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 1500 க்கும் மேற்பட்ட காவல்துறையினருக்கு, விருந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் வெண்கலம் வென்ற இரு அணிகளுக்கு தலா 1 கோடி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், '44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது. இந்தியாவில் அதிலும் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாடில் பொதுப் பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்' பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement