மக்களே உஷார்.. சென்னை உட்பட மூன்று மாவட்டங்கள்.. காலை 8.30 மணிவரை அதிகனமழைக்கு வாய்ப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு அதாவது சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு உளிட்ட அடுத்த 12 மணிநேரம் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 3 மாவட்டங்களுக்கு அதாவது சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு உளிட்ட அடுத்த 12 மணிநேரம் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது நாளை (04/12/2023) காலை 8.30 மணி வரைக்கும் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், “கடந்த 01-12-2023 மற்றும் 02-12-2023 அன்று அரசு உயர் அலுவலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நான் ஏற்கனவே அவர்களை எல்லாம் அழைத்து அறிவுரை வழங்கியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன 4 ஆயிரத்தி 967 இதர நிவாரண மையங்களில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண மையங்களுக்கு அழைத்து வந்து தங்க வைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருவள்ளூர், கடலூர் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 350 வீரர்கள் கொண்ட 14 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள்தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் 2 கோடியே 44 லட்சம் பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை குறுஞ்செய்திகள் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது.
கடலோர மாவட்டங்களில் உள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும் பொதுவகளுக்கும் தொடர்ந்து எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன
அதிலும் மீனவர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்திகள் அனுப்பப்பட்டது. இதனால் அனைத்து படகுகளுக்கும் பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறோம்.
புயல் மற்றும் கனமழை குறித்து பொதுமக்களுக்கு தொடர்ந்து உங்களைப் போன்ற ஊடகங்கள் மூலமாகவும், செய்திகளை வெளியிட்டு தொடர்ந்து அந்தப் பணியை ஆற்றி வருகிறோம். புயலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விளக்கமாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளாகி இருக்கக்கூடிய இடங்களில் இருந்து 685 நபர்கள் 11 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மழை எச்சரிக்கை உள்ள மாவட்டங்களில் கண்காணிப்பு அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார்கள்.
மாநில அவசரகால செயல்பாட்டு மையம் பெருநகர சென்னை மாநகராட்சி ஒருங்கிணைந்த கட்டளை ) மற்றும் கட்டுபாட்டு மையம் மின்சாரத் துறை உட்பட அனைத்து கட்டுப்பாட்டு அறைகள் கொண்டிருக்கின்றன 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும்
பொதுமக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருப்பது:
புயலின் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மின் கம்பங்கள் மின் கம்பிகள் மரங்கள் விழுவதற்கான இருக்கின்ற வாய்ப்புகள் காரணமாக பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.