காஞ்சிபுரம்: 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ; ஒருவர் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 45 ஆனது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தொற்று பரவும் வேகம் சற்று குறைந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 க்கும் கீழ் குறைந்து வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 . அதில் காஞ்சிபுரம் பகுதியில் ஆறு நபர்கள், குன்றத்தூர் பகுதியில் 4 நபர்களுக்கும், ஸ்ரீ பெரும்புதூர் பகுதியில் ஒன்பது நபர்களுக்கும், உத்திரமேரூர் பகுதியில் மூன்று நபர்களுக்கும், பிற மாவட்டத்தை சேர்ந்த 4 நபர்களுக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 46 ஆக உள்ளது. அதேபோல் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருநாள் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 3924 மாதிரிகளை சோதனை செய்ததில் 45 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71035. சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 69380. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 455 அவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1200 ஆக உள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )