மேலும் அறிய
Advertisement
கடலூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - ஆபத்தை அறியாமல் பயணம் செய்யும் மாணவர்கள்
’’பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் இலவசம் என்பதால் பெரும்பாலன மாணவ மாணவிகள் அரசு பேருந்தை மட்டுமே நம்பி வருகின்றனர்’’
கொரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 469 பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படதாபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 683 ஊராட்சிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பபட்ட கிராமங்களில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அரசு பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் பெரும்பாலான மாணவ மாணவிகள் மாவட்ட தலைநகர் மற்றும் நகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். சுமார் 20 முதல் 50 கிலோமீட்டர் பேருந்தில் பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலையில் கடலூரில் பள்ளி முடிந்த பிறக்கு கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மேலும் சில நேரங்களில் ஒரு சில ஊர்களுக்கு மிக குறைவான பேருந்து மட்டுமே இயக்கபடுவதால் ஒரே பேருந்துகளில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முந்தி அடித்து கொண்டு பேருந்தில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் இலவசம் என்பதால் பெரும்பாலன மாணவ மாணவிகள் அரசு பேருந்தை மட்டுமே நம்பி வருகின்றனர், இந்த நிலையில் மகளிர்களுக்கும் நகர பேருந்துகளில் இலவசம் என்பதால் தற்போது பேருந்துகளில் அதிகளவு மக்கள் கூட்டம் கூடுகிறது. இதே போல் விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகள் காலை மாலை என இரு நேரம்ங்களில் பேருந்துக்காக காத்திருகின்றர். மேலும் படியில் தொங்கியபடி பல மாணவர்கள் பணயம் செல்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையாகவும் உள்ளது.
இதில் மேலும் இனி அடுத்து 6 முதல் 8 வரை பள்ளிகள் திறக்கபடவுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலை குறைக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு என கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்த பொழுது அவர்கள் கடலூர் மாவட்டத்தில் மேலும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது மேலும் கடலூரில் இருந்து சிதம்பரம், நெய்வேலி போன்ற ஊர்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகளிலும் மாணவர்களை ஏற்றிசெல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் ஐந்து ஆசிரியைகள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion