மேலும் அறிய

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை ஏலம் விட நடவடிக்கை - ஆட்சியர் ராகுல் நாத்

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பொது ஏலத்திட விட நடவடிக்கை

2000/- அபராதத் தொகை

செங்கல்பட்டு மாவட்டத்தில், சாலைகளில் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்துகின்ற வகையில் விடப்படுகின்ற கால்நடைகளை பிடித்து மாவட்ட அளவில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பட்டியில் அடைக்கப்படுவதுடன், கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000/- அபராதத் தொகையாக விதிக்கப்படும் நடைமுறை 01.01.2022 முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், பிடிக்கப்படும் கால்நடைகளை 24 மணி நேரத்திற்குள் ரூ.2000/- அபராதத் தொகையாக செலுத்தி, உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் கால்நடை வளர்ப்பவர்களின் வீடு அல்லது கால்நடை பிடிபட்ட எல்லைக்குட்பட்ட காவல் ஆய்வாளரின் பரிந்துரை கையொப்பத்தை பெற்று பிரமாண பத்திரம் சமர்ப்பித்த பின்னரே கால்நடைகளை கால்நடை உரிமையாளர்கள் ஓட்டிச் செல்லலாம். தவறும் பட்சத்தில், 24 மணி நேரத்திற்கு பின்பும் உரிமைக் கோரப்படாத கால்நடைகள், உள்ளாட்சி அமைப்புகள் அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மூலம் பொது ஏலம் விடப்படும்

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பொது ஏலத்திட விட நடவடிக்கை

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சி அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் பிடிக்கப்படும். னவே, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை அவர்களின் சொந்த இடங்களிலேயே கட்டி வைத்து பராமரிக்கவும், பொது வெளியில் திரிய விடாமல் முறையாக பராமரித்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், கால்நடைகளை பொது வெளியில் விடும் பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டம், 1960 பிரிவு 11 (1) உட்பிரிவு (h) (i) & (j)-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையில் புகார் பதிவு செய்யப்பட்டு மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டஆட்சித்தலைவர் ர.ராகுல் நாத்  தெரிவித்துள்ளார்.

நிம்மதி பெருமூச்சு

 சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் காரணத்தினால் ,போக்குவரத்து நெரிசல் மட்டும் ஏற்படாமல் பல விபத்துகளும் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக மாலை நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும் பகுதிகளில் மாடுகளை தேடி அலையும் காரணத்தினால், பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுகுறித்த அறிவிப்பு மீண்டும் வெளியிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது பொதுமக்களிடையே நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget