மேலும் அறிய
Advertisement
Chennai-Kuala Lumpur: அட கேட்கவே, செமையா இருக்கு.. சென்னை டூ கோலாலம்பூர் இடையே இனி தினசரி விமான சேவை..!
தினமும் 5 விமானங்கள்,10 விமான சேவைகளை இயக்கின. இனிமேல் 6 விமானங்கள், 12 விமான சேவைகளை இயக்குகின்றன
சென்னை- கோலாலம்பூர் - சென்னை இடையே, கூடுதலாக தினசரி, விமான சேவை தொடக்கம். இதுவரை தினமும் 5 விமானங்கள்,10 விமான சேவைகளை இயக்கின. இனிமேல் 6 விமானங்கள், 12 விமான சேவைகளை இயக்குகின்றன. சென்னையில் இருந்து மலேசியா நாட்டுக்கு, கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால், பயணிகள் மகிழ்ச்சி.
சென்னை சர்வதேச விமான நிலையம் ( chennai international airport )
சென்னையில் இருந்து மலேசிய நாட்டிற்கு இதுவரையில் தினமும் 5 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் 2, ஏர் ஏசியா விமானங்கள் 2, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 1. இந்த 5 விமானங்கள் தினமும் சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கும், கோலாலம்பூரில் இருந்து சென்னைக்குமாக 5 விமானங்கள், 10 விமான சேவைகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை- கோலாலம்பூர் இடையே தினசரி விமான சேவை ( chennai kuala lumpur flights )
மலேசியா சிறந்த சுற்றுலா தளமாக இருப்பதாலும், மலேசிய நாட்டில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமானங்கள் இருப்பதாலும், சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஆனால் தினமும் 5 விமானங்கள் மட்டுமே, மலேசிய நாட்டிற்கு இருப்பதால், சென்னையில் இருந்து மலேசியா செல்லும் பயணிகளுக்கு, விமானங்களில் டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
விமான சேவைகள் எப்பொழுது உள்ளது ?
இந்த நிலையில் சென்னை-கோலாலம்பூர்-சென்னை இடையே தினசரி விமான சேவையை புதிதாக, பாட்டிக் ஏர்லைன்ஸ் விமானம் தொடங்கியுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தினமும் மாலை புறப்படும் இந்த விமானம், இரவு 10:25 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேர்கிறது. அதன்பின்பு இந்த விமானம் மீண்டும் இரவு, 11:15 மணிக்கு சென்னையில் இருந்து, மலேசியா தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டு செல்கிறது. இந்த புதிய விமான சேவை கடந்த வியாழன் முதல் தொடங்கியுள்ளது. இந்த விமானம் போயிங் ரக விமானம் என்பதால், 189 பயணிகள் வரை, ஒரே நேரத்தில் பயணிக்க முடியும். சென்னை- கோலாலம்பூர்- சென்னை இடையே, கூடுதலாக மேலும் ஒரு விமானம், 2 புதிய விமான சேவைகளை தொடங்கப்பட்டுள்ளது, விமான பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion