Chess Olympiad : இன்று முதல் ட்ரோன் பறக்க தடை.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா?
நாளை முதல் செங்கல்பட்டு மகாபலிபுரம் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
![Chess Olympiad : இன்று முதல் ட்ரோன் பறக்க தடை.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா? Chess Olympiad Chief Secretary reviews arrangements and drone are banned Chess Olympiad : இன்று முதல் ட்ரோன் பறக்க தடை.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/03/c0011c48e1d03e636a03bf7d3a28258f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய வரலாற்றில் முதல் முறையாக 187 நாடுகள் பங்கேற்கின்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாயிண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.
மாமல்லபுரம் பூஞ்சேரில் நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க 44வது சத்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிக்காக சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சர்வதேச தரத்திலான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள அரங்கில் 200 வீரர்களும் தற்போது அமைக்கப்பட்டு வரும் அரங்கில் 500 வீரர்களும் ஒரே நாளில் 700 வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜூலை 28ம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 227 அணிகளைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதிகளில் நாளை முதல் (12.07.2022) ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர்
உலகம் முழுவதும் இருந்து 2,500 விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர். போட்டி நடக்கும் அரங்கம், பாதுகாப்பு, கார் நிறுத்தம், சாலை வசதி, போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து நேற்று தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அவர் போட்டி நடைபெறும் அரங்கம் மற்றும் வளாகத்தை பார்வையிட உள்ளார். மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)