மேலும் அறிய

" நிர்வாண வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் " இளம் பெண் உள்பட 3 பேர் அதிரடி கைது

சென்னை கொடுங்கையூரில் மரக்கடை அதிபரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் மிரட்டிய 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது

ஆடைகளை கழட்டிய நிலையில் வீடியோ 

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி ( வயது 63‌ ) இவர் கடந்த 15 வருடங்களாக அதே பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கோவிந்தசாமிக்கு அறிமுகமான பத்மா என்பவர் தன்னிடம் மரம் இருப்பதாக கூறி கொடுங்கையூர் சூழல் புனல் கரை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

அப்போது பத்மாவும் கோவிந்தசாமியும் வீட்டிற்குள் சென்றவுடன் அங்கு நின்று கொண்டிருந்த பத்மாவின் தோழி எஸ்தர் நான்சி என்பவர் கதவை பூட்டி உள்ளார். உடனே பத்மா கோவிந்த சாமியை திட்டி அவரது ஆடைகளை கழட்டி தாங்கள் வைத்திருந்த கைபேசியில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்பொழுது எஸ்தர் நான்சி மற்றும் அவரது கணவர் முன்னா கருப்பையா ஆகியோரும் வந்து கோவிந்தசாமியை மிரட்டியுள்ளனர்.

ரூ.5 லட்சம் பணம் கேட்டு மிரட்டல்

"இந்த வீடியோ வெளியே போகாமல் இருக்க 5 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தசாமி பணத்தை தயார் செய்கிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் கொடுங்கையூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து கொடுங்கையூர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பத்மா என்பவரிடம் கோவிந்தசாமி நட்பாக பழகி வந்ததும், அடிக்கடி பத்மாவுக்கு பண உதவிகள் செய்து வந்ததும் தெரிய வந்தது. கோவிந்தசாமியிடம் பணம் உள்ளதை அறிந்து கொண்ட பத்மா அவரிடம் இருந்து பணத்தை அபகரிக்க அவரை தனியாக வரவழைக்க திட்டமிட்டுள்ளார். பின்னர் எஸ்தர் , நான்சி வீட்டிற்கு அழைத்துச் சென்று அவரது கணவரை வைத்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கில் ஈடுபட்டது தெரிய வந்தது.

மிரட்டி பணம் பறிக்கும் நோக்கம்

இதையடுத்து  கொடுங்கையூர் எருக்கஞ்சேரி மூலக்கடை ஜிஎன்டி ரோடு பகுதியைச் சேர்ந்த பத்மா ( வயது 47 ) கொடுங்கையூர் சூழ்ப்புணல் கரை அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த எஸ்தர் நான்சி ( வயது 30 ), இவரது கணவர் முன்னா கருப்பையா ( வயதே 33) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இதில் எஸ்தர் நான்சி ஆந்திராவில் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து கோவிந்தசாமியை மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இதனையடுத்து மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Property Tax: சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
சென்னையில் வரி உயர்ந்ததா? இல்லையா? உண்மையில் நடப்பது என்ன? ஏமாற்றுவது யார்?
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
டிராஃபிக்கிற்கு குட்பை! பக்கிங்ஹாம் கால்வாயில் 'வாட்டர் மெட்ரோ': மாஸ் பிளான்! டெண்டர் அறிவிப்பு!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
Chennai OMR Makeover: லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து, சைக்கிள் டிராக், மாஸ்டர் பிளான்!
லண்டன், சிங்கப்பூர் ரேஞ்சுக்கு மாறப்போகும் சென்னையின் OMR சாலை! மெட்ரோ, பேருந்து,மாஸ்டர் பிளான்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
மஹிந்திரா எஸ்யுவிகளுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் சலுகை- எந்தெந்த காருக்கு எவ்வளவு?
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Embed widget