மார்கழி மட்டும் ஏன் இத்தனை சிறப்பு? மார்கழி டிசம்பர் பிற்பாதி முதல் ஜனவரி முற்பாதி வரை கொண்டாடப்படுகிறது மார்கழி மாதம் ஆண்டின் பிரகாசமான காலமாகக் கருதப்படுகிறது மார்கழியில் வீடுகளின் முன் கோலமிடுவது பாரம்பரியமாகும். தியானம் மற்றும் இறைவனை போற்றும் மாதமாக கருதப்படுக்கிறது பகவத் கீதையில் மார்கழி மாதத்தை மிகப் புனிதமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் மார்கழி மாதம் மூழுவதும் பாடப்படுகிறது. 30 நாட்களுக்கு தினமும் ஒரு பாசுரம் பாடப்படுகிறது அதிகாலையில் பெருமாள் பாடல்களைப் பாடப்படுவதும், பஜனைகள் நடத்தப்படுவதும் வழக்கம். கர்நாடக இசை நிகழ்ச்சிகள், நாதஸ்வரம், மற்றும் ஆலயப்பாடல்களின் காலம் மார்கழியே.. மார்கழியில் பிரார்த்தனை செய்தல் உயர்ந்த பயனை தரும் என்று நம்பப்படுகிறது.