மேலும் அறிய

சென்னையில் இனி மிதந்துகிட்டே போகலாம்.. வரப்போகுது வாட்டர் மெட்ரோ - எங்கிருந்து எது வரை?

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு படகு போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கையை அரசு தயார் செய்துள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநிலத்திலே அதிக மக்கள் வாழும் நகரமாக உள்ளது. பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என்று போக்குவரத்திற்கு பல வழிகள் இருந்தும் பீக் ஹவர் எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து மிக கடும் நெரிசலாகவே இருக்கிறது. 

சென்னையில் நீர்வழிப்போக்குவரத்து:

போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே சாலைகள் விரிவாக்கம், மேம்பாலம், கூடுதல் மெட்ரோ வழித்தடங்கள் பணிகள் சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தரை வழி மட்டுமின்றி நீர்வழிப்போக்குவரத்தையும் சென்னையில் அறிமுகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

1950 காலகட்டத்தில் சென்னையில் கூவம் நதியில் படகுப்போக்குவரத்து படு ஜோராக நடந்து வந்தது. தற்போது கூவம் நதி அதற்கான அடையாளமே இல்லாமல் சிதைந்து விட்டது. கூவம், அடையாறு ஆகிய நதிகள் சென்னையில் பாய்ந்து வருகிறது. 

வாட்டர் மெட்ரோ திட்டம்:

இந்த நதிகளை அகலப்படுத்தியும், தூய்மைப்படுத்தியம் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்க வேண்டம் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது, சென்னை வாட்டர் மெட்ரோ திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, நேப்பியர் பாலம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வரை இந்த நீர்வழிப் பாேக்குவரத்தை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. 

இதற்காக படகு நிலையங்கள், படகு போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள உள்ளது. இந்த நீர்வழிப் போக்குவரத்து சுமார் 15 முதல் 20 கி.மீட்டருக்கு முதற்கட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர்.  அடையாறு நதியை இதற்காக பயன்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், கூவம் நதி பல இடங்களில் நீரோட்டம் குறைவாகவும், படகு போக்குவரத்திற்கு ஏதுவாக இல்லாமல் இருப்பதுமே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

திட்ட அறிக்கை தயார்: 

கூவம் நதியை காட்டிலும் அடையாறு ஆறு மாசு குறைவாகவும், சற்று விரிவாகவும் காணப்படுகிறது. இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்த திட்டத்தின் முதற்கட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால் இதை மேலும் பல கி.மீட்டருக்கு நீட்டிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் சாதாரண பயணிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் இந்த திட்டம் கவரும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இதன்மூலம் அரசின் வருவாய் அதிகரிப்பதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும் என்று கருதப்படுகிறது. கேரளாவில் உள்ள கொச்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வாட்டர் மெட்ரோ சேவையை மாதிரியாக கொண்டு இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த உள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget