Schools Colleges Leave: இடி, மின்னலுடன் கனமழை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
Chennai School College Holiday Nov 4: கனமழை காரணமாக சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு அருகே கடல் பகுதியில் உருவான மழை மேகத்தால் இடியுடன் கூடிய கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 3.5 செ.மீ., மீனம்பாக்கத்தில் 1.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் ஒரு மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
பள்ளிக்கரணை, மேடவாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. சென்னை அண்ணாநகரில் மாலை 5.30 மணிமுதல் 6 மணி வரை 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை தமிழகத்தில் டெல்டா மாவட்டம் உட்பட 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வானிலை நிலவரம்:
தமிழ்நாட்டில், கடந்த மாதம் அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கி வட கிழக்கு பருவமழையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 7-ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை 8 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பகல் பொழுதில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை திடீரென மழை பெய்தது. சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை மழையானது விட்டு விட்டு பெய்து வந்தது. இதையடுத்து, மாலை வரை வெயில் அடித்தது. ஆனால், சென்னையில் பகல் பொழுதில் வெயில் அடித்து வந்த நிலையில், மாலை திடீரென மழை பெய்தது.
சென்னையில் ஆயிரம் விளக்கு, நந்தனம், எழும்பூர், விமானநிலையம், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அம்பத்தூரி, கொடுங்கையூர், முகப்பேர், அயனாவரம், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், சோழிங்க நல்லூர், பல்லாவரம், தாம்பரம், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
View this post on Instagram
விடுமுறை:
தொடர் மழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.