Chennai Rains: காலை முதல் குளுகுளு காற்று.. மிதமான மழை.. சென்னையில் மழை எப்படி இருக்கும்னு பாருங்க..!
சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்க உள்ள சூழலில் சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெப்பம் தனிந்தது தற்போது குளு காற்று வீசி கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர் 7 மற்றும் 8 ம் தேதிகளில் திருச்சி, புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34.35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 04.10.2022- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு , சென்னை - புதுப்பிக்கப்பட்டது pic.twitter.com/uisLH8lHCI
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 4, 2022
05.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
06.19.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.10.2022 மற்றும் 08.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னதுடன் கூடிய கனமழை பெய்யவாய்ப்பு.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
04.10.2022: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
04.10.2022 முதல் 06.10.2022 வரை : குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஓட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
07.10.2022 மற்றும் 10.2022 குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.