Chennai Power cut: சென்னையில் நாளை (20.05.2025) மின்தடை.. ஆவடி, திருமுல்லைவாயல் மக்களே உஷார்...!
Chennai Power Shutdown Tommorow: சென்னையில் நாளை (20.05.2025) பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நாளை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், சென்னை ஆவடி மற்றும் திருமுல்லைவாயில் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில், மின்விநாயகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அவ்வாறு மாதம் தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக, மின்தடை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருக்கிறது. அவ்வாறு மின்தடை மேற்கொள்ளப்படும் போது, சம்பந்தப்பட்ட பகுதி மக்களுக்கு முன்கூட்டியே இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த வகையில் சென்னையில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக மின்சார துறை வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கோடையில் பொதுமக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் நிலையில், பராமரிப்பு பணி காரணமாக மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மின்தடை மேற்கொள்ளப்படும் பகுதிகள் என்ன ? - Chennai Power cut Areas
திருமுல்லைவாயல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்ச் ஆண்டனி நகர், பொதூர் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் : மேலே கூறிய உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளது. சிடிஎச் சாலை, கவரபாளையம், சிந்து நகர், டிஆர்ஆர் நகர், தனலட்சுமி நகர், நாசர் மெயின் ரோடு, மோசஸ் தெரு ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மின்தடை மேற்கொள்ளப்பட உள்ள நேரம் : மேலே கூறிய உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





















