Chennai Power Shutdown: சென்னை மக்களே.! நாளை (10.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Chennai Power Shutdown January 10 : சென்னையில் மின் பராமரிப்பு காரணமாக, பல்வேறு இடங்களில் நாளை மின் தடையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அரசானது அவ்வப்போது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதனால், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் சரி செய்யப்படும்.
சென்னையில் நாளை மின்தடை:
இந்நிலையில், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், சென்னையில் நாளை ( 10-01-2025 ) ஜனவரி 10 ஆம் தேதி பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னயில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்:
மாருதி நகர் முழுப் பகுதி, அண்ணா நகரின் ஒரு பகுதி, சுதர்சன் நகர் பகுதி, மாதா நகர், லக்ஷ்மி நகர், IAF மெயின் ரோடு, ரிக்கி கார்டன், AKB ஹோம்ஸ், ஐஸ்வர்யா அபார்மென்ட், சுமேரு நகரம் மற்றும் ஸ்ரீனிவ், மாம்பாக்கம், கேளம்பாக்கம், மெட்டாலா, வில்லிபாளையம், மாடம்பாக்கம் இந்திரா நகர் மாடம்பாக்கம் பிரதான சாலை
ஆகையால், மேற்குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், முன்னெச்சரிக்கையாக, நாளை மின்சாரம் மூலம் செய்யக்கூடிய முக்கிய வேலைகளை காலை 9 மணிக்குள் செய்து முடித்து வைத்துக் கொள்ளுங்கள்.