மேலும் அறிய

சென்னையில் சிக்கிய யானை தந்தம்... பின்னணியில் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்

தாம்பரம் அருகே சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது இரண்டு யானை தந்தங்கள் பிடிபட்டது

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் யானை தந்தம் கடத்தல் விவகாரத்தில், சிக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல்

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் விலங்குகள் சம்பந்தமான விலை உயர்ந்த பொருட்கள் கடத்தப்படுவது அவப்பொழுது நடைபெற்று வருகிறது. யானை தந்தம், மான் கொம்பு, விலங்குகளின் தோல், விலங்குகளின் பற்கள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதால், அதனை தடுக்க தமிழ்நாடு வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போன்ற கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும், கடத்தல் கும்பல்களை தொடர்ந்து கண்காணித்து, கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கைதான நான்கு பேர்

இந்தநிலையில் யானைத்தந்தம் கடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த நிலையில், தமிழ்நாடு வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பிரிவினரும், தாம்பரம் வனச்சரக அலுவலகமும் இணைந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து தாம்பரம் - வேளச்சேரி பிரதான சாலையில் சென்னை கிறிஸ்தவ கல்லூரி அருகே நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்களை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களில் ஒன்று ஆண் யானை உடையதும், மற்றொரு யானை பெண் யானையுடையது என தெரிய வந்தது. கைப்பற்றப்பட்ட யானை தந்தங்கள் முழுமையாக வளர்ந்த யானையுடையது இல்லை எனவும், அவை ஒரு அடி அளவு கொண்ட யானைத் தந்தம் எனவும் விசாரணையில் தெரிய வந்தது.

வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியருக்கு தொடர்பா ?

நான்கு பேரை கைது செய்த வனத்துறையினர் மற்றும் போலீசார் நான்கு பேரிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், யானை தந்தத்தை வாங்கி கைமாற்றி விடும் வேலையை தான் நான்கு பேரும் செய்து வந்தனர் என தெரிய வந்தது. மேலும், விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றிய தற்காலிக ஊழியரான அப்பு (எ) சதீஷ் என்பவரிடம் இருந்து தந்தங்கள் கிடைத்ததாக பிடிபட்டவர்கள் தெரிவித்ததாகவும், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானைத் தந்தங்களை சதீஷ் திருடிச் சென்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். 

தொடர்ந்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினரை உஷார் படுத்தினர். வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவித யானை தந்தமும் திருடு போகவில்லை என தெரியவந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சதீஷ் திடீரென தலைமறைவானது, மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக உள்ள சதீஷை கைது செய்ய வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

பூங்கா நிர்வாகம் சொல்வது என்ன ?

இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: தாம்பரம் அருகே இரண்டு யானை தந்தங்கள் பிடிபட்டிருக்கிறது. இதில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றும் சதீஷ் மீது சந்தேகம் எழுந்துள்ளது. பூங்காவில் பணியாற்றிய சதீஷ் தற்போது தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து இதுகுறித்து ஆய்வு செய்வதில் உயிரில் பூங்காவில் தந்தம் எதுவும் திருடு போகவில்லை என தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் குழு அமைப்பு, பாதுகாக்கப்பட்ட பொருட்கள் குறித்து மறு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
ABP Premium

வீடியோ

US Trade India | ஜவுளி முதல் நகைகள் வரை இந்தியப் பொருட்களுக்கு 0% வரி நண்பருக்காக இறங்கிய டிரம்ப்
MK Stalin Angry | ஆப்சென்ட் ஆன அமைச்சர் டோஸ் விட்ட முதல்வர் பரபரப்பு வீடியோ | Minister Gandhi | DMK
Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
“அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வரவழைத்தது அதிமுக ஆட்சி“: மு.க. ஸ்டாலின்
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
Chennai: மக்களே! சென்னையில் நாளை தண்ணீர் வராது - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK Vijay: ரத்து செய்யப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு: தேர்தலில் பாடம் புகட்டுவது உறுதி - விஜய் ஆவேசம்
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
TVK PMK: ராமதாசை நேரில் சந்திக்கிறாரா செங்கோட்டையன்? விஜய்யுடன் கூட்டணி வைப்பாரா?
Honda Shine vs Hero HF Deluxe: ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
ஹோண்டா ஷைனா.? ஹீரோ HF டீலக்ஸா.? விலை, மைலேஜ் அடிப்படையில் எந்த பைக் சிறந்தது.? அலசுவோம்
Gaming Mobiles Under 15000: நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
நீங்க செல்போன்ல கேம் ஆடுறவங்களா.? ரூ.15,000-க்கும் குறைவான Gaming மொபைல்கள் முழு லிஸ்ட் இதோ
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
இளையராஜா இசையில் நடிக்க ஆசைப்பட்ட எம்ஜிஆர் - அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
NEET UG 2026: 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget