மேலும் அறிய

இன்று வசூல் எவ்வளவு ? என் வசூலை நீ ஏன் கேட்க? கொலையில் முடிந்த கைகலப்பு

இரு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையிலான கைகலப்பில் தாக்கியதில் ஒருவர் மரணம் - ஒருவர் கைது.

வசூல் எவ்வளவு என்று கேட்டதற்கு அடிதடி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, பூலாங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகாந்த் ( வயது 33 ) என்பவர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (28.04.2025) இரவு சவாரி முடித்து கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, முனுசாமி சாலை சந்திப்பில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த போது , விஜயகாந்த் அங்கு ஆட்டோவில் இருந்த அறிமுகமான தங்கம் என்பவரிடம் இன்று ஷேர் ஆட்டோ வசூல் எவ்வளவு என்று கேட்ட போது , தங்கம் என்னுடைய வசூலை நீ ஏன் கேட்க என அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தங்கம் , விஜயகாந்தை கையால் தாக்கி கீழே தள்ளி , காலால் மார்பில் எட்டி உதைத்துள்ளார். காயமடைந்த விஜயகாந்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயகாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சண்முகம் ( வயது 51 ) என்பவர் R-7 கே.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , கொலை வழக்கில் தொடர்புடைய  தங்கம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் தங்கம் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் தங்கம் இன்று (30.04.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சம்பள பணம் தராததால் , ஊழியர் செய்த செயல்

சென்னை அண்ணாநகர் 3 - வது அவென்யூ "J" பிளாக் பகுதியில் உள்ள தனியார் கார் ஷோருமில் மேலாளராக சங்கர் ( வயது 30 ) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலே குறிப்பிட்டுள்ள கார் ஷோருமில் இருந்த Beleno Sigma மாருதி என்ற காரை RTO அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு அனுப்புவதற்காக அண்ணாநகர் 3 - வது அவென்யூ பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஷோருமில் இருந்த மேற்படி காரின் சாவியை எடுத்து 28.04.2025 அன்று காரை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கார் ஷோருமின் மேலாளர் சங்கர், K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி கார் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் , அப்புலிங்க வாத்தியார் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் ( வயது 44 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி திருடப்பட்ட Beleno Sigma மாருதி கார் மீட்கப்பட்டு, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ரமேஷ் என்பவர் மேற்படி கார் ஷோருமில் முன்பு பணிபுரிந்து வந்ததும் , சம்பள பாக்கி தராத காரணத்தினால் ஷோருமில் இருந்த கார் சாவியை திருடி காரை திருடிச் சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ரமேஷ் விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு! சுயதொழில் தொடங்க சென்னையில் பயிற்சி
" இறந்த பெண் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி " நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
EV Velu: சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.. சுதாரித்து கொண்டு முந்திய திமுக முன்னாள் அமைச்சர்!
EV Velu: சுத்துப்போட்ட லஞ்ச ஒழிப்புத்துறை.. சுதாரித்து கொண்டு முந்திய திமுக முன்னாள் அமைச்சர்!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget