Kilambakkam Metro: எல்லாமே மாறுது.. கிளாம்பாக்கம் டபுள் டக்கர் மெட்ரோ.. 13 ஸ்டேஷன்கள்.. செங்கல்பட்டு வரை மேம்பாலம்..!
Kilambakkam Metro Extension: சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

Chennai Metro Extension Airport to Kilambakkam: பொதுமக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம் அறிக்கை தமிழ்நாட்டு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் வரை சுமார் 9,445 கோடி ரூபாயில், செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் - Chennai Metro Rail Limited (CMRL)
சென்னையில் முக்கிய போக்குவரத்தாக மெட்ரோ ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை மெட்ரோ ரயில்கள் தற்போது 2 வழித்தடங்களில் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116 கிலோமீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. சென்னை போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பி விரைவாக, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை, வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - Kilambakkam Bus Terminus
கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக தென் மாவட்ட மற்றும் வடமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு, பிரத்தேக பேருந்து நிலையமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதற்கு, தற்போது சாலை மட்டுமே ஒரே வழியாக உள்ளது.
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் கோரிக்கை எழுந்தது. கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது .
கிளாம்பாக்கம் மெட்ரோ- Kilambakkam Metro Station
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை சுமார் 15.5 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், பல்வேறு நிர்வாக சிக்கல்கள் காரணமாக தாமதமாகி வந்தது. தற்போது விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில், அமைப்பதற்கான புதிய திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள் என்னென்ன? Key Features Of Kilambakkam Metro Project
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் தேசிய நெடுஞ்சாலை காண மேம்பால சாலை அமைய உள்ளது. 18 முதல் 20 மீட்டர் உயரத்தில் மெட்ரோ ரயில் மேம்பால பாதை அமைய உள்ளது.
கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் பாதை, மேம்பால பாதை மற்றும் ரயில் பணிமனை பணிகள் ஆகியவை மேற்கொள்ள 9445 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு தடையின்றி செல்ல, வெளிவட்ட சாலையுடன் இணைக்க தாம்பரம் அருகே சாய்வு பாதைகள் அமைக்கப்பட உள்ளது. இந்த மேம்பால சாலை நேரடியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள் வந்து அங்கிருந்து, செங்கல்பட்டு வரை நீட்டிக்கப்பட உள்ளது.
எத்தனை ரயில் நிலையங்கள் அமைய உள்ளன? Metro Station Between Chennai Airport To Kilambakkam Metro Station.
கிளாம்பக்கத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வரை 13 நிறுத்துங்கள் அமைய உள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வண்டலூர் ரயில் நிலையம், பீர்க்கங்கரணை, இரும்புலியூர், தாம்பரம், திருவிக நகர், மகாலட்சுமி நகர், குரோம்பேட்டை, கோதண்டம் நகர், பல்லாவரம் மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைகின்றன.
மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட அறிக்கை மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன், டெண்டர் வெளியிடப்படும். டெண்டர் அடிப்படையில் நிறுவன ம் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்படும்.
பணி ஆணை வழங்கப்பட்டதிலிருந்து மூன்று வருடங்களுக்குள் இந்த திட்டப்பணிகளை முடிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டு இறுதியில் இந்த மெட்ரோ பணிகளை முடிக்க, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.





















