மேலும் அறிய
Advertisement
Chennai Airport: தொழில்நுட்ப கோளாறு ஒரு வாரம் நிறுத்தப்பட்ட சென்னை - லண்டன் விமான சேவை - பயணிகள் அவதி
சென்னை-லண்டன் தினசரி விமானத்தில், பயணிகள் அதிகமாக பயணம் மேற்கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை.
லண்டன்- சென்னை- லண்டன் இடையே இயக்கப்பட்டு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், லண்டனில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த ஒரு வாரமாக இயக்கப்படாததால், சென்னையில் இருந்து லண்டன் செல்ல வேண்டிய பயணிகள் அவதியில் இருக்கின்றனர்.
சென்னையிலிருந்து லண்டனுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், நேரடி விமான சேவையை தினமும் இயக்கி வருகிறது. இந்த விமானம் தினமும் அதிகாலை 3:15 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 5:30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும். சென்னை லண்டன் இடையே நேரடி விமான சேவை என்பதாலும், மேலும் லண்டன் சென்று அங்கு இருந்து ஸ்காட்லாந்து, பிரேசல்ஸ், ரோம், பாரிஸ், நியூயார்க், வாஷிங்டன், சிக்காகோ உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமானங்கள் அதிக அளவில் இருப்பதாலும், சென்னை-லண்டன்-சென்னை இடையே இயக்கப்படும் தினசரி விமானத்தில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கிறது.
ஆனால் இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், கடந்த ஒரு வாரமாக இயக்கப்படவில்லை. இதனால் சென்னையிலிருந்து லண்டன் செல்ல வேண்டிய விமான பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் தற்போது துபாய், கத்தார், அபுதாபி, ஃபிராங்க்பார்ட் வழியாக லண்டன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடியாக செல்லாமல், மாற்று வழியில் இணைப்பு விமானங்கள் மூலம் செல்வதால் பயணிகளுக்கு பயண நேரம் அதிகரிப்பதோடு, அதிகமான செலவு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் பயணிகள் சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் தலைமையகமான லண்டனில், சர்வர் பிரச்சினை உள்ளிட்ட, தொழில்நுட்ப கோளாறுகள் திடீரென ஏற்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் இயக்கப்பட்டு வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவைகள், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு சீர் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஓரிரு தினங்களில், தொழில்நுட்ப கோளாறுகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு, சென்னை-லண்டன்-சென்னை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மீண்டும் வழக்கம்போல் இயங்கத் தொடங்கும் என்று கூறுகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion