மேலும் அறிய

Crime : ஆன்லைன் ஆப்களின் கொடூர நகங்கள்.. கடனை கட்டிய பிறகும் டார்ச்சர்.. சென்னை ஐடி ஊழியர் தற்கொலை.. என்ன நடந்தது?

சென்னையில் மொபைல் ஆப் மூலம் கடன் பெற்ற விவகாரத்தில் ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே மொபைல் ஆப் மூலம் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தியும் கூடுதலாக 50 ஆயிரம் கேட்டு ஊழியர்கள் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சில ஆண்டுகளாகவே மொபைல் ஆப் மூலம் கடன் பெறும் நபர்களிடமிருந்து கடன் கொடுத்தோர் அதிக தொகையை கேட்டு தொந்தரவு செய்து வருவதாக அதிக புகார்கள் எழுந்து வருகிறது. மேலும், இதிலும் சில மோசடியும் அவ்வபோது அரங்கேறியும் வருகிறது. மொபைல் ஆப் மூலம் கடன் பெற பயனாளர்கள் முயற்சித்து வேண்டாம் என்று வெளியேறினாலும் அவர்கள் கடன் வாங்கியதாகவே காட்டப்படுகிறது என்றும், அதற்கான தொகையை கேட்டு போன் வருவதாகவும் கிரைம் துறை காவல்துறைக்கு புகார்கள் குவிக்கின்றனர். இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனியை சேர்ந்தவர் 23 வயதான நரேந்திரன். இவர் பெருங்குடியில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். ஏதோ ஒரு தனது சொந்த தேவைக்காக பணம் தேவைப்பட்டதால் நரேந்திரன் மொபைல் ஆப் மூலம் ரூ 1 லட்சம் வரை கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வாங்கிய கடனுக்கு முறையாக வட்டியுடன் அசல் தொகையை ஆன்லைனிலேயே இவர் கட்டியும் வந்துள்ளார். 

இந்தநிலையில், கடன் கொடுத்த நிறுவனத்தில் இருந்து வாங்கிய கடனுக்கு கூடுதலாக வட்டியுடன் ரூ. 50 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று கூறி அடிக்கடி நரேந்திரனுக்கு போன் செய்துள்ளனர். அதற்கு அவர், தான் ஏற்கனவே வாங்கிய கடனுக்கு முழு வட்டியுடன் அசல் தொகையையும் கட்டிவிட்டேன். எதற்காக கூடுதலாக 50 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால், அந்த நிறுவனத்தில் இருந்து பேசிய ஊழியர்கள் மிகவும் ஆபாசமாக பேசியது மட்டும் இல்லாமல், நேற்று நரேந்திரன் தாய் வசந்திக்கு, செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு மிகவும் தகாத வார்த்தைகளை பேசி மிரட்டியும் உள்ளனர்.

இதுகுறித்து தனது மகன் நரேந்திரனிடம் அவரது தாய் வசந்தி விளக்கம் கேட்டுள்ளார். இதனால் மனமுடைந்த நரேந்திரன் நேற்று மதியம் வீட்டின் அறைக்கு சென்றார். இந்நிலையில் அவரது பெற்றோர் காலை 8.30 மணிக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். அங்கிருந்து, நரேந்திரனுக்கு வெகு நேரமாக போன் செய்தும் எடுக்கவில்லை. இதனால் தனது உறவினர் ஒருவரை அனுப்பி பார்த்தபோது வீட்டில் நரேந்திரன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த உறவினர் பெற்றோருக்கு தெரிவிக்க, உடனே சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த போலீசார் நரேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் இத்தனையாவது இடமா தற்கொலையில்..? 

இந்தியாவில் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசத்திற்கு அதற்கு அடுத்த 2 இடங்களில் உள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) அறிக்கை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.2% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நாடுமுழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 1,53,052 தற்கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தற்கொலைக்கான காரணங்கள் : 

தொழில் சார்ந்த பிரச்சனைகள், வன்கொடுமை, மனநல பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள், தனிமை உணர்வு, வன்முறை, போதை மருந்து , தீராத வலி, நிதி நெருக்கடி போன்றவைகள் இந்தியாவில் தற்கொலைகள் எண்ணிக்கைக்கு முக்கிய காரணங்களாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 

மாநிலம் வாரியாக தற்கொலை விவரம் : 

மகாராஷ்டிரா - 22,207 (13.5 சதவீதம்)
தமிழ்நாட்டு - 18,925 (11.5 சதவீதம்)
மத்தியப் பிரதேசம் - 14,965 (9.1 சதவீதம்)
மேற்கு வங்கம் - 13,500 (8.2 சதவீதம்)
கர்நாடகா - 13,056 (8 சதவீதம்)

அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் மேற்கண்ட 5 மாநிலங்கள் டாப் 5 இடங்களை பிடித்துள்ளது.

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.

மாநில உதவிமையம் : 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

தலைப்பு செய்திகள்

TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
சென்னையில் மின்தடை !! ஆகஸ்ட் - 1 ம் தேதி 5 மணி நேர மின்தடை !! எங்கெங்கு தெரியுமா ?
" திமுக செஞ்ச துரோகத்தால தான் ஆட்சியே போச்சு " - எடப்பாடியை கழட்டி விட்ட பூவை ஜெகன் மூர்த்தி
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்... பட்ஜெட் விலையில் Quantum Energy Plasma இ ஸ்கூட்டர்! எவ்ளோ?
Mekdatu: கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
கர்நாடகாவிற்கு நோ சொன்ன மத்திய அரசு..! தேவையில்லாத பயணம் - CM விஜய் திட்டத்தை கைவிடுகிறாரா?
TN Weather News: இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? -தமிழக வானிலை அறிக்கை
இடி, மின்னல் காற்றுடன் கனமழை- எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Nexon Rival: நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
நெக்ஸானுக்கு போட்டியாக 25KM மைலேஜில் வரும் புது எஸ்யுவி - மினிமம் பட்ஜெட், மேக்ஸிமம் அம்சங்கள்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Embed widget