மேலும் அறிய

‘இதுபோல் மீண்டும் பேச மாட்டேன்’ - கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்.

பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசியது குறித்த வழக்கில் கைதான கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்புப் பிரசார பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயலில் ஆகஸ்ட் 1ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலரும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென மூன்று முறை கடும் ஆக்ரோசமாக பேசியிருந்தார்.
 
இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்த புகாரில், இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசிய கனல் கண்ணன் மீதும், நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
 
இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரது முன் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், ஆகஸ்ட் 11ஆம் தேதி தள்ளுபடி செய்த நிலையில்,  புதுச்சேரியில் பதுங்கியிருந்த கனல் கண்ணனை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
 
ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோயிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது,  தேவையற்ற கருத்துகளை யூடியூப்-ல் பேசுவது ஃபேசனாகிவிட்டது என தெரிவித்ததுடன், ஒரு கட்சியில் இருக்கும்போது மாற்று கொள்கை உடையோர் குறித்து ஏன் பேச வேண்டும் என கனல் கண்ணனுக்கு கேள்வி எழுப்பினார்.
 
பின்னர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், 4 வாரங்களுக்கு தினமும் காலையும், மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதித்துள்ளார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
La Ganesan: இல.கணேசனுக்கு என்னாச்சு? நாகலாந்து ஆளுநர் சென்னை மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
தமிழ்நாட்டின் வயிற்றில் அடித்த ட்ரம்ப்.. டேஞ்சரில் ஒன்னே முக்கால் லட்சம் கோடி பிசினஸ் - காப்பாற்றுவது யார்?
USA Tariff:
USA Tariff: "இப்போதைக்கு ஒன்னும் பேச வேண்டாம்" மோடியின் டார்கெட்டிற்கு ரெட் கார்ட், டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Huma Qureshi: ரஜினி, அஜித் பட நடிகையின் உறவினர் அடித்துக் கொலை - பார்க்கிங் பிரச்னையால் வந்த வினை
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
Aadi Velli: ஆடி வெள்ளிக்கிழமைங்க.. வரலட்சுமி நோன்புடன் வந்த 4வது ஆடி வெள்ளி - பரவசத்தில் பக்தர்கள்
New Gen Hyundai Venue: ப்ரீமீயம் அம்சங்கள், லெவல் 2 ADAS - அப்க்ரேட்டாகி வரும் ஹுண்டாய் எஸ்யுவி - அக்.24 ரிலீஸ்
New Gen Hyundai Venue: ப்ரீமீயம் அம்சங்கள், லெவல் 2 ADAS - அப்க்ரேட்டாகி வரும் ஹுண்டாய் எஸ்யுவி - அக்.24 ரிலீஸ்
Kilambakkam Metro: விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை! நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்! விரைவில் மெட்ரோ ரயில் சேவை?
Kilambakkam Metro: விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை! நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம்! விரைவில் மெட்ரோ ரயில் சேவை?
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
ECI Rahul Gandhi: ஓட்டு திருட்றோமா? சத்தியம் பண்ணுங்க? ராகுல் காந்தி கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் ரியாக்‌ஷன்
Embed widget