Schools Holiday: கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...லிஸ்ட் இதோ!
School Leaves: திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதிலும் , சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்த நிலையில், சிறிது நேரத்திலேயே நிலைமை தலைகீழாக மாறியது. நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று மாலை நேரத்தில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
எழும்பூர், ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர், வடபழனி, கோடம்பாக்கம், வியாசர்பாடி, பெரம்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல சென்னை புறநகரப் பகுதிகளான தாம்பரம், செம்பரம்பாக்கம், திருவேற்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சுமார் 4 மணி நேரத்திற்காக மேலாக விடாமல் மழை பெய்தது.
4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து பெய்து வரும் மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கின்றன. மேலும், வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்கின்றன பெரம்பூர், கெங்குரெட்டி, நுங்கம்பாக்கம், துரைசாமி, அரங்கநாதன் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகல் மூடப்பட்டுள்ளன. இந்த மழை இரவு 10 மணி வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வரும் நிலையில், சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம் போல் இன்று பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கத்தில் 19 செ.மீ மழை
சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலான 2 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொளத்தூரில் 14.11 செ.மீ மழை பொழிந்துள்ளது. மேலும், அம்பத்தூரில் 12.6 செ.மீ, திருவிக நகர் 12 செ.மீ, கொளத்தூரில் 14.11 செ.மீ, அம்பத்தூரில் 5.4 செ.மீ, கத்திவாக்கம் 9.5 செ.மீ, அடையாறு 7.32 செ.மீ, மதுரவாயல் 8.2 செ.மீ மழை பொழிந்துள்ளது.
மாநகராட்சி அறிவுறுத்தல்:
மழை நீடிக்கும் நிலையில், களப்பணியாளர்கள் நிவாரப்பணி மேற்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மாநகராட்சி களப்பணியாளர்கள் இரவு வீடு திரும்பாமல் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் மழை நீடிப்பதால் வீடுகிளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும், கனமழை பாதித்த இடங்களுக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சென்று மக்கள் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.