மேலும் அறிய

ரூ.63 லட்சம் அவுட் !! சினிமா பாணியில் நடந்த தங்க மோசடி !! உணவகத்தில் நடந்தது என்ன ?

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.63 லட்சம் பணத்தை ஏமாற்றிய சென்னையைச் சேர்ந்த 5 பேர் கைது

" குறைந்த விலையில் தங்கம் "

சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் அன்மோல் ஜெயின். தங்க வியாபாரியான இவர் தனது உறவினர் நமீத் என்பவருடன் இணைந்து மொத்தமாக தங்கம் வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 17-ந்தேதி , நமீத் தனது உறவினர் அன்மோல் ஜெயினுக்கு போன் செய்து , குறைந்த விலைக்கு தங்கம் கிடைக்கும் இடம் ஒன்று இருப்பதாகவும் , அங்கு சென்று தங்கம் வாங்கிக் கொள்ளுமாறும் கூறி உள்ளார். இதனையடுத்து , தங்கம் வாங்குவதற்காக ரூ.63 லட்சத்தை தனது ஊழியர் ராஜேந்திர ஜெயின் மூலம் எழும்பூர் பவுண்டன் பிளாசாவிற்கு அன்மோல் ஜெயின் வரவழைத்து உள்ளார்.

" தங்கத்தையும் - ரசீதையும் எடுத்து வருகிறேன் "

குறைந்த விலைக்கு தங்கம் விற்பனை செய்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக ஸ்ரீராம் என்பவர் அன்மோலைச் சந்தித்துள்ளார். ஸ்ரீராம் தன்னுடன் சக்தி என்ற வாலிபரை அழைத்து வந்துள்ளார்.

சக்தியும் அவரது தந்தை சாந்தகுமாரும் எழும்பூர் பவுண்டன் பிளாசாவில் கடை வைத்திருப்பதாகவும் , பெரிய அளவில் தங்கம் வியாபாரம் செய்வதாகவும் அன்மோல் ஜெயினிடம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதையடுத்து , பவுண்டன் பிளாசா அருகே வைத்து 63 லட்சம் ரூபாயை அன்மோல் ஜெயின் கொடுத்து உள்ளார். பணத்தை வாங்கிய சக்தி , மேலே சென்று பணத்தை வைத்து விட்டு , தங்கத்தையும் ரசீதையும் எடுத்து வருகிறேன் எனக் கூறி விட்டு சென்று உள்ளார்.

சிறிது நேரத்தில் சாந்தகுமார் ஒரு போன் அழைப்பு வந்ததாக நாடகமாடி , அன்மோல் ஜெயினை ஜெமினி பாலம் அருகே உள்ள ஸ்ரீமிட்டாய் உணவகத்திற்கு வரச் சொல்லி உள்ளார். அங்கு தங்கம் ஒப்படைக்கப்படும் என நம்பிச் சென்ற அன்மோல் , அங்கு நீண்ட நேரம் காத்திருந்தும் யாரும் வராததால் அதிர்ச்சி அடைந்தார்.

காவல் நிலையத்தில் புகார் - 5 பேர் கைது

மீண்டும் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது , அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்மோல் ஜெயின், இது பற்றி எழும்பூர் போலீசில் புகார் அளித்தார்.

இது பற்றி தீவிர விசாரணை நடத்திய போலீசார் சாந்தகுமார் , ஸ்ரீராம் , ராம் குமார் மற்றும் உதய் கிரண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடிக்கு மூளையாக செயல்​பட்ட சக்​திவேல் ( வயது 23 ) என்​பவரும் பிடிபட்​டுள்​ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
குறைந்தபட்ச கட்டணம் ரூ.50? தமிழகத்தில் ஆட்டோ கட்டண உயர்வு பற்றி வெளியான முக்கிய அப்டேட்!
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ரயில் பயணிகளே உஷார்! நாளை முதல் ரயில் சேவைகளில் திடீர் மாற்றம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Embed widget