மேலும் அறிய
Advertisement
Chennai Ford : சென்னை : ஃபோர்டு ஊழியர்கள் மீண்டும் போராட்டம்.. காரணம் என்ன?
சென்னை அடுத்த மறைமலைநகர் பகுதியில் உள்ள போர்டு கம்பெனி வளாகத்திற்கு வெளியே ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளமாக இயங்கி வந்த கார் உற்பத்தி செய்யும் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையானது கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாக கூறி தொழிற்சாலையை கடந்த ஜூன் மாதம் மூடப் போவதாக நிர்வாகம் அறிவித்தது, இந்நிலையில் கடந்த ஜூலை 31ஆம் தேதி உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வந்தது இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் தற்போது 80 ஆயிரம் கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன . இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதனால் 14,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த கடந்த மாதம் ஜூலை 31ஆம் தேதி முழுமையாக உற்பத்தியை நிறுத்தியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், பல கட்ட போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
தங்கள் பணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்த அலுவலகம் உள்ளே செல்ல முயன்ற பொழுது, அனுமதி மறுத்ததால் ஃபோர்டு ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலோசனை நடத்த உள்ளே சென்ற பொழுது, எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தொழிற்சாலை கதவுகள் பூட்டப்பட்டது இருந்ததால் ஊழியர்கள் ஆத்திரம் அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே இது குறித்து மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஊழியர்கள் கூறுவது என்ன?
இதுகுறித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சிலர் கூறுகையில், முதலில் நாங்கள் போராட்டம் நடத்தினோம் நிர்வாகம் மற்றும் சங்கத்தினர் கூறிய நம்பிக்கை அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டு மீண்டும் உற்பத்தியை தொடங்கி கடைசி காரை உற்பத்தி செய்து முடித்து விட்டோம். போராட்டத்தை கைவிட்ட பொழுது எங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என கூறி போராட்டம் நடைபெற்றது. அது குறித்தும் பேச்சுவார்த்தையில் , ஈடுபடுவோம் என தெரிவித்த நிலையில் இதுவரை பணி நிரந்தரம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில் இன்று ஆலோசனைக்காக சென்ற பொழுது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தொழிற்சாலை கதவுகள் மூடப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என தெரிவித்தனர்.
என்னதான் ஆனது ஃபோர்டு நிறுவனத்திற்கு?
அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில் சுமார் 20 ஆண்டுகளாக வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது.இந்த ஆலைகளில் வருடத்திற்கு நான்கு லட்சம் கார்கள் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், தற்போது 80,000 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஃபோர்டு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் அந்நிறுவனத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, இந்தியாவில் உள்ள இரு ஆலைகளையும் மூட ஃபோர்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. சென்னையில் மறைமலை நகர் மற்றும் குஜராத்தின் சனந்த் பகுதிகளில் அந்நிறுவனத்தின் வாகனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுக தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion