Chennai Floods: மழை காலத்தில் காரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்..? இதை மட்டும் எப்பவும் செய்யாதீங்க..!
சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், கார்கள் தண்ணீரில் மூழ்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னையில் நேற்று மதியம் முதல் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாலைகளின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள், கார்கள் தண்ணீரில் மூழ்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
#ChennaiRains #ChennaiFloods Pallikarani (velachery) Be safe pic.twitter.com/8PW74ZNvb7
— Gokul Tamilselvam (@Gokul46978057) December 4, 2023
மேலும், அதிகபட்சமாக பள்ளிக்கரணைகள் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை சேர்ந்தவர் தங்கள் பகுதிகளின்கீழ் நிறுத்தி வைத்திருந்த 20க்கு மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்ட வீடியோ இன்று காலை முதல் சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 2015 ம் ஆண்டு சென்னையில் பொழிந்த மழையின் அளவைவிட இந்தாண்டு அதிகம் என்று வானிலை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#ChennaiRains
— Bala Harish (@balaharish25) December 4, 2023
Hi Chennai!
The same old chennai with not a single improvement. This is happening every year & still no one cares about it. All they need is big apartments & for that they cut down the trees, demolish the lakes. Hence, the suffering!!!#CycloneMichuang #CycloneAlert pic.twitter.com/L0yo94nwBD
இந்தநிலையில், மழை காலத்தில் கார்களை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், அதிவேக காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மழை பெய்தால் காரை வைத்திருப்பவர்கள் செய்யக்கூடாது என்னவென்று கீழே தெரிந்துகொள்ளுங்கள்.
- மரங்கள், தற்காலிக கட்டமைப்புகள் அல்லது சுவர்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்க்கவும்.
- பார்க்கிங் பிரேக் பயன்படுத்தப்படுவதையும், வீல் பிளாக்குகளைப் பயன்படுத்தி சக்கரங்கள் பூட்டப்பட்டிருப்பதையும் உறுதிசெய்யவும்.
- தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் உங்கள் காரை ஓட்டுவதைத் தவிர்க்கவும்.
- தண்ணீர் தேங்கிய இடத்தில் சிக்கிக் கொண்டால், தண்ணீர் நுழைவதால் என்ஜின் சேதமடைவதைத் தவிர்க்க உங்கள் வாகனத்தை ஸ்டார்ட் செய்ய வேண்டாம்.
என தெரிவிக்கப்பட்டுள்ளது.