மேலும் அறிய

தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நபர்.. 'போன் பே' மூலம் ரூ. 40,000 பறிப்பு - இருவர் கைது

இருவரை கைது செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபரிடம் 20,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

தொடர் கதை 
 
அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சென்னை தலைநகரை சுற்றி உள்ள, சென்னை புறநகர் பகுதிகளில் அதிகளவு வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் புறநகர் பகுதிகளாக இருக்கும், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பகுதிகளில் அடிக்கடி வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளிப்பதும்,  காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து சிறையில் அடைத்து பொருட்களை மீட்டு தண்டனை வாங்கிக் கொடுப்பதும் தொடர்கதையாக உள்ளது.
தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நபர்.. 'போன் பே' மூலம் ரூ. 40,000 பறிப்பு - இருவர் கைது
 
குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக செல்லும், நபர்கள் மற்றும் காதல் ஜோடிகளை குறிவைத்து இது போன்ற வழிப்பறி சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் மாலை வேளையில்,  துவங்கி அதிகாலை வரை தொடர்ந்து இரவு ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தும் காவல்துறையினர் பார்வையில் சிக்காமல் அடிக்கடி இது போன்ற சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
போன் பே மூலம் பணம் பறிப்பு
 
இந்த நிலையில் சென்னை நீலாங்கரை, கடற்கரையில் தனது தோழியுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞரை மிரட்டி, அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த பணம் மற்றும் நூதன முறையில் செயலி மூலம் பணம் பறித்துக்கொண்ட சென்ற மர்ம கும்ப கும்பலை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டை , ஜெயராம் தெருவைச் சோந்தவா் முகம்மது ஹூசைன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது தோழியுடன் சென்னை நீலாங்கரை , அடுத்துள்ள கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, கடற்கரை ரசித்தபடி தோழியுடன் தோழியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
 
தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நபர்.. 'போன் பே' மூலம் ரூ. 40,000 பறிப்பு - இருவர் கைது
 
இருவர் கைது 
 
இரவு நேரம் என்பதால், அதிகளவு மக்கள் கடற்கரையில் இல்லாமல் இருந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மரம் மர்ம கும்பல், கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த, இருவரிடமும் கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளனா். ஹூசைன் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளாா். இருந்தும் அந்த மர்ம கும்பல் விடாமல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஹூசைனை தாக்கி, அவா் வைத்திருந்த பணப்பையை பறித்து, அதில் இருந்த ரூ.600 திருடியுள்ளனர். அவரது கைப்பேசியை பறித்து, அதில் பணம் அனுப்பும் செயலி  மூலம், தங்களது வங்கிக் கணக்குக்கு, ரூ.40 ஆயிரத்தை அனுப்பி வழிப்பறி செய்தனா்.
chennai ecr road neelankarai 4000 roberry from employee he sepaking with  girl friend TNN தோழியிடம் பேசிக் கொண்டிருந்த நபர்..! கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்..! ஆப் மூலம் 40,000 பறிப்பு..!
 
இதுகுறித்த காவல் நிலையத்தில் ஹூசைன் அளித்த புகாரின் பதில், வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் . சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில்  போன் பே மூலம் பணம் அனுப்பிய விவரங்களை சேகரித்து பள்ளிகரணையைச் சேர்ந்த ஊசி உதயா (எ) உதயகுமார் (25), விக்னேஷ் (27), ஆகிய இருவரை கைது செய்த நீலாங்கரை தனிப்படை போலீசார், அவர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget