அக்காவின் கள்ளக் காதல்: தம்பி செய்த கொடூரம்! சென்னை கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு, அதிர்ச்சி தரும் காரணம்!
அக்காவின் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மாமாவை கொலை செய்த வழக்கில், மைத்துனருக்கு ஆயுள் தண்டனை விதித்து , சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

அக்காவின் கள்ளக் காதலுக்கு துணை போன தம்பி !! கொலையில் முடிந்த சம்பவம்
சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 38 ) பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் எருக்கஞ்சேரி நேரு நகரைச் சேர்ந்த வசந்தி ( வயது 30 ) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் செங்குன்றத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் வசந்திக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதை உதயகுமார் கண்டித்துள்ளார்.
தங்கள் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்து வந்த உதயகுமாரை தீர்த்துக்கட்ட, இருவரும் முடிவு செய்தனர். வசந்தி தன் தம்பி கார்த்திக் ( வயது 30 ) - யிடம் உதயகுமாரை கொலை செய்ய உதவி கேட்டுள்ளார். கடந்த 2017 டிசம்பர் 1 ல் கொடுங்கையூர் நேரு நகரில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு உதயகுமாரை அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து , கார்த்திக்கையும் உடந்தையாக இருந்ததாக வசந்தி , ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரபாவதி முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் சுரேஷ் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திக் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அபராதமும் விதித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் தீர்ப்பளித்தார். வசந்தி , ரமேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை அவர்கள் இருவரையும் நீதிபதி விடுவித்தார்.
போலி ஆவணங்கள் தயாரித்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் விற்று மோசடி
சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் ( வயது 57 ) இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மஹா கணேஷ் , புண்ணியகோடி ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் சேர்ந்து பாலவாக்கம், பல்கலை நகர் முதல் குறுக்கு தெருவில் 2,400 சதுரடி இடத்தை ஜெயகுமாரிடம் 2 கோடி ரூபாய்க்கு விற்று பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே சரவணவேல் என்பவர் தன்னுடைய நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக போலீசில் புகார் அளித்தார். அப்போது தான் ஏமாற்றப்பட்டது ஜெயகுமாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து புண்ணிய கோடி , மஹா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.
இதில் வெள்ளனுாரைச் சேர்ந்த புண்ணியகோடி ( வயது 38 ) திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மஹாகணேஷ் ( வயது 37 ) ஆகியோர் சரவணவேல் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஜெயகுமாருக்கு நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
போலி ஆவணம் தயார் செய்து 2.25 கோடி ரூபாய் மோசடி
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பாரதி வேலுசாமி 68, என்பவருக்கு ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் 7,500 சதுரடி காலி மனை உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்தது தெரிந்தது. இந்த நிலத்தின் மதிப்பு 2.25 கோடி ரூபாய். இதுகுறித்து விசாரித்த போலீசார் பவர் ஏஜன்டாக பதிவு செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த சார்லஸ் கமலேசன் ( வயது 50 ) என்பவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.





















