ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்.. அச்சத்தில் சென்னை மக்கள்
சென்னை காசிமேட்டில் பட்டப் பகலில் அடுத்தடுத்து இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கி இருக்கிறது.

சரித்திர பதிவேடு ரவுடியை வெட்டிய கும்பல்
சென்னை தண்டையார்பேட்டை கும்மாளமன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சரித்திர பதிவேடு குற்றவாளியான அருண்மொழி என்கின்ற மடோனா. இவர் தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் கத்தியை எடுத்து அருண் மொழியை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து ஆபத்தான நிலையில் இருந்த அருள் மொழியை தகவல் இருந்து வந்த காசிமேடு போலீசார் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அருண்மொழி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்ப தகராறில் உறவினர்களே கொலை செய்தது அம்பலம்
இது தொடர்பாக காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் குடும்பத்த தகராறில் உறவினர்களே கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரிய வந்த நிலையில் இதுகுறித்து மூன்று பேரை தற்போது கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த அருண்மொழி மீது மணலில் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது என்றும் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. காசிமேடு பகுதியில் பட்ட பகலில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியாக அமர்ந்து மது அருந்தியவரை சரமாரியாக குத்தி கொலை செய்த கும்பல். காசி மேட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவம் அரங்கேறியதால் அச்சத்தில் பொதுமக்கள்
சென்னை காசிமேடு இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஶ்ரீதர் ( வயது 37 ) வயதான இவருக்கு ஒரு மகளும் மகனும் உள்ளனர். இந்நிலையில் இவர் காசிமேடு பழைய ஏலக்கூடம் கடற்கரை பகுதியில் தனியாக அமர்ந்து பைபர் படகில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஶ்ரீதரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளனர். இதில் ஶ்ரீதர் சம்பவ இடத்திலே உயிரிழந்த நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இளைஞர்கள் சிலர் கத்தியுடன் ஆட்டோவில் தப்பி சென்றதை பார்த்து விட்டு போலீசாருக்கு தகவல் அளித்ததாக தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் ஶ்ரீதரின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். காசி மேட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவம் அரங்கேறியதால் பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.





















