மேலும் அறிய

சென்னை : கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை !! பேருந்தில் பயணிக்கு ஆபாச செய்கை !!

தனியார் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தில் பயிற்சியிலிருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பயிற்சியாளர் கைது

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னையில் வசித்து வரும் 19 வயது பெண் ஒருவர் கல்லூரி இளங்கலை படித்துக் கொண்டு , அண்ணா நகர், சாந்தி காலனியில் உள்ள தனியார் தொழில் நுட்ப கல்வி பயிற்சி நிறுவனத்தில் சுமார் 10 நாட்களுக்கு முன் சேர்ந்து கல்வி பயிற்சி பெற்று வருகிறார்.

பெண் பயிற்சி வகுப்பில் இருந்த போது, அதே கல்வி நிறுவனத்தில் பயிற்சியாளராக (Trainer) வேலை செய்து வரும் மணிமாறன் என்பவர் பயிற்சி கொடுப்பது போல அப்பெண்ணின் அருகில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், அந்த கல்வி நிறுவனத்தில் புகார் தெரிவித்து, பின்னர் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னியம்மன்மேடு மணிமாறன் ( வயது 42 ) என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட மணிமாறன் என்பவர் கல்வி நிறுவனத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பயிற்சியாளராக வேலைக்கு சேர்ந்துள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட மணிமாறன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மாநகர பேருந்தில் பெண்ணுக்கு ஆபாச செய்கை காண்பித்த 2 பேர்

சென்னை எண்ணூர், நேரு நகரில் வசித்து வரும் பிரதீப்குமார் ( வயது 36 ) என்பவர் அரசு மாநகர போக்குவரத்து கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தடம் எண்.1 C என்ற பேருந்தை தீவுத் திடலில் இருந்து எண்ணூர் வரை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்த போது மதியம் கல்மண்டபம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய 2 நபர்களிடம் மேற்படி பேருந்தின் நடத்துனர் மணிமாறன் என்பவர் பயணச் சீட்டு கேட்ட போது, இருவரும் சேர்ந்து, நடத்துனர் மணிமாறனை தகாத வார்த்தைகள் பேசியும், பேருந்தில் இருந்த பெண் பயணியிடம் ஆபாச செய்கை செய்து, அப்பெண் பயணியை கையால் தாக்கியுள்ளனர்.

அதன் பேரில் மணிமாறன், மீன்பிடி துறைமுகம் பேருந்து நிறுத்ததில் இருவரையும் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறிய போது, மணிமாறனை, இருவரும் சேர்ந்து கைகளாலும், கால்களாலும் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இத்தாக்குதலில் மயக்கமடைந்த மணிமாறனை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து பேருந்து ஓட்டுநர் பிரதீப்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் ஆகிய இருவரும் மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்  பேரில் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) ஆகிய சட்டப் பிரிவுகளில் இருவேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மீன்பிடி துறைமுக காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குமார், ( வயது 32 ) , தேசிங்குராஜ் ( வயது 21 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
போதைக்கு அடிமையான மகன் !! தந்தையின் கோபம் உச்சம் !! தூத்துக்குடியில் நடந்த கொடூரம்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
திருமண நாளில் நிகழ்ந்த துயரம் ; கணவன் புறக்கணித்ததால் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த பெண்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
மாமியார் - மருமகள் தகராறு ; டீ போட மறுத்ததால் அரிவாளால் வெட்டி கொலை !! அதிர்ச்சி சம்பவம்
வீடு, மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை !! வழக்கறிஞர், ஆவண எழுத்தர் யாருக்கு முக்கியத்துவம் ?
வீடு, மனை வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை !! வழக்கறிஞர், ஆவண எழுத்தர் யாருக்கு முக்கியத்துவம் ?
Advertisement
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK VCK Alliance : 10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
10 தொகுதி கண்டிப்பா வேணும்.. அடம்பிடிக்கும் திருமா.!! சைலண்ட் மோடில் திமுக- அடுத்தது என்ன.?
Election Nomination Suvidha App : இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
இனி நேரில் வர வேண்டாம்.! ஆன்லைனிலேயே ஈசியா வேட்புமனு தாக்கல் செய்ய சூப்பர் சான்ஸ்- எப்படி தெரியுமா.?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Vijay BJP: விஜய் ”நோ” சொன்னதால் கடுப்பான பாஜக.. அட்டாக் தவெக, ஆறிப்போன புளி சாதத்தை கிண்டும் ADMK?
Trump Stunned by Iran: “ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
“ஈரான் இப்படி அடிப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கல“: இவ்ளோ பவர் இருக்கா.? அலறிய ட்ரம்ப்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
முதலமைச்சர் சூளுரை, மேற்கு வங்கத்தில் பாஜக உட்கட்சி பூசல், கியூபா மீது கண் வைத்த ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Embed widget