Law Student Issue | கொடுங்கையூர் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்.. அதே காவல் நிலையத்தில் 9 போலீசார் மீது வழக்குப்பதிவு !
சென்னை சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் : 9 காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் கடந்த 14ஆம் தேதி, வியாசர்பாடியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் சைக்கிளில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை வழிமறித்த காவல்துறையினர் முககவசம் அணியவில்லை என்று கூறி அபராதம் விதித்துள்ளனர். அத்துடன் அவர் வைத்திருந்த சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக மாணவருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்து அந்த மாணவரை காவல்துறையினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தெரியக்கூடாது என்பதற்காக காவல் நிலையித்தில் சிசிடிவி கேமராக்களை செயல்படாமல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின் முடிவில், கொடுங்கையூர் தலைமைக்காவலர் பூமிநாதன், முதல்நிலை காவலர் உத்திரகுமரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
#BREAKING | சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: காவல் ஆய்வாளர் உள்பட 9 போலீசார் மீது வழக்குப்பதிவு https://t.co/wupaoCzH82 | #Chennai | #TNPolice | #Law pic.twitter.com/8BikAkPS2i
— ABP Nadu (@abpnadu) January 21, 2022
இந்நிலையில் சென்னை சட்டக்கல்லூரி மாணவர் மீது காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவாகாரத்தில் காவல் ஆய்வாளர் நஜிமா உள்பட் 9 பேர் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரின் மீது 3 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தாக்கப்பட்ட மாணவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தின் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். அத்துடன் தவறு செய்த காவல்துறையினரை பணியில் இருந்து நீக்க வேண்டும் போன்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். அதைத் தொடர்ந்து தற்போது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க: தஞ்சை மாணவி தற்கொலை : அதிரவைக்கும் இறுதி வாக்குமூலம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..