மேலும் அறிய
Advertisement
Chennai Airport: சென்னை விமான நிலையம் செல்பவர்கள் இந்த தவறை செய்யாதீர்கள் ..! அப்புறம் அவ்வளவுதான்..!
24 மணி நேரத்திற்கு ரூ. 90 வசூலிக்கப்படுகிறது. அதைப்போல் கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 75 ம், 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச கட்டணம் ரூ. 500 வசூலிக்கப்படுகிறது "
சென்னை விமான நிலையத்தில், மல்டி லெவல் கார் பார்க்கிங்கில் வாகனங்களை நிறுத்தாமல், அத்துமீறி விமான நிலைய வளாகத்துக்குள் நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கும் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
மல்டி லெவல் கார் பார்க்கிங்
சென்னை விமான நிலையத்தில், ரூ. 250 கோடியில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பில், ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதியில் இருந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அதன்பின்பு இருசக்கர வாகனங்கள் உட்பட வாகனங்கள் அனைத்தும், அந்த மல்டி லெவல் கார் பார்க்கில் தான் நிறுத்த வேண்டும், என்ற உத்தரவு உள்ளது.
உள்நாட்டு முனைய வருகை
ஆனால் பயணிகள் மற்றும் பயணிகளை வழியனுப்ப வரவேற்க வருபவர்கள் பலர், அதோடு விமான நிலையத்திற்கு பல்வேறு பணிகள் நிமித்தமாக வரும் தனியார் ஏஜென்சி நிறுவன ஊழியர்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங் பில் நிறுத்தாமல், சென்னை சர்வதேச முனையம் வருகை பகுதி புறப்பாடு பகுதி, அதைப்போல் உள்நாட்டு முனைய வருகை, புறப்பாடு பகுதிகளில், ஆங்காங்கே வெளியில் நிறுத்தி வைத்து விடுகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதைப் போன்ற போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக தான், இந்த அடுக்குமாடி கார் நிறுத்தம் ரூ. 250 கோடியில் கட்டப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
போக்குவரத்துக்கு இடையூறாக வெளியிலேயே
அந்த புதிய கார் நிறுத்தம் செயல்பாட்டிற்கு வந்து, சுமார் 10 மாதங்கள் ஆகியும், அந்தக் கார் நிறுத்தத்தில், வாகனங்களை நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக வெளியிலேயே வாகனங்கள் தொடர்ந்து நிறுத்தப்படுவதால், விமான நிலைய வளாகத்திற்குள் தேவையில்லாத போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு, பயணிகளின் வாகனங்கள் விரைந்து உள்ளே வர முடியாமல், அதைப்போல் வெளியில் செல்ல முடியாமல், கடும் நெரிசல்கள் ஏற்படுகின்றன.
இருசக்கர வாகனங்களுக்கு
இதை அடுத்து அதைப்போல் பார்க்கிங்கில் நிறுத்தாமல், விமான நிலைய வளாகத்திற்குள் அத்துமீறி நிறுத்தப்படும் வாகனங்களை, பறிமுதல் செய்து அபராதம் விதிக்கும் நடவடிக்கையை சென்னை விமான நிலையம் தொடங்கியுள்ளது. இதற்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இந்த தனியார் ஒப்பந்த நிறுவன ஊழியர்கள், ரெக்கவரி ஒன்றில், விமான நிலைய வளாகத்துக்குள் ரோந்து வந்து, அத்துமீறி நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, ரெக்கவரி வேனில் ஏற்றி, பார்க்கிங் பகுதியில் கொண்டு சென்று ஒப்படைக்கின்றனர். அங்கு இருசக்கர வாகனங்களுக்கு ரூ.100, கார்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை வசூலிக்க பின்பு, வாகனம் விடுவிக்கப்படுகிறது.
பல மடங்கு அதிக கட்டணம்
மல்டி லெவல் ஆறு அடுக்கு கார் பார்க்கிங் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களுக்கு, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20 ம், அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு ரூ. 90 வசூலிக்கப்படுகிறது. அதைப்போல் கார்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 75 ம், 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச கட்டணம் ரூ. 500 வசூலிக்கப்படுகிறது. ஆனால் முறையாக பார்க்கிங்கில் நிறுத்தாமல், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பார்க்கிங் கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணம், அபராதமாக வசூலிக்கப்படுவது, சென்னை விமான நிலையத்தில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion