மேலும் அறிய
Advertisement
Direct Flight: இனி கவலை வேண்டாம்..! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு நேரடி விமான சேவை..!
தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும், மியான்மர் நாட்டின் யங்கூன்-சென்னை-யங்கூன் இடையே, புதிதாக வாராந்திர நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது.
பல்வேறு அமைப்புகள் கோரிக்கை
மியான்மர் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெருமளவு வசிக்கின்றனர். ஆனால் மியான்மர் நாட்டுக்கு, தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கு, தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
யங்கூன்- சென்னை- யங்கூன்
இந்த நிலையில் தற்போது மியான்மர் நாட்டில் உள்ள யங்கூன்- சென்னை- யங்கூன் இடையே நேரடி விமான சேவையை தொடங்க, மியான்மர் நாட்டின், மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சனிக்கிழமை முதல், யங்கூன்-சென்னை-யங்கூன் இடையே பயணிகள் விமான சேவை தொடங்க இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால், புதிய விமான சேவை தொடங்குவது, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
மியான்மர் நாட்டின் தலைநகர் ரங்கூன்
இந்த நிலையில் இன்று, மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம்,யங்கூன்-சென்னை- யங்கூன் இடையே புதிய விமான சேவையை, தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த விமான சேவை நடக்கிறது.பயணிகளின் வரவேற்பை பொறுத்து, இந்த விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மியான்மர் நாட்டின் தலைநகர் ரங்கூன் எனப்படும் யங்கூனில் இருந்து புறப்பட்டு, காலை 10:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அந்த விமானம் மீண்டும் காலை 11:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3:15 மணிக்கு யங்கூன் நகரை சென்றடைகிறது.
நேரடி விமான சேவை
இன்று காலை மியான்மர் தலைநகர் ரங்கூன் எனப்படும் யங்கூனில் இருந்து, மியான்மர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 38 பயணிகளுடன் புறப்பட்டு, காலை 10:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக, மியான்மரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு அதே விமானம் சென்னையில் இருந்து, இன்று பகல் 12 மணிக்கு, 42 பயணிகளுடன் மியான்மர் நாட்டின் யங்கூன் நகருக்கு புறப்பட்டு சென்றது. மியான்மர் நாட்டிலுள்ள யங்கூனில் இருந்து, இந்தியாவுக்கு ஏற்கனவே டெல்லி, கொல்கத்தா, பீகார் மாநிலத்தின் கயா ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டும், நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவின் நான்காவது நகரமாக, சென்னைக்கும், நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion