மேலும் அறிய
Advertisement
காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு நடந்த வளைகாப்பு விழா
’’7 வகையான உணவுகள், 9 வகையான பழங்கள், வெள்ளி வளையல், பட்டு புடவை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை வைத்து வளைகாப்பை நடத்தினர்’’
சென்னை மாதவரம் எல்லைக்குட்பட்ட மாதவரம் காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணிபுரிபவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தா. இவரது கணவர் சதீஷ் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 8 வயதில் மோனிஷா என்ற பெண் உள்ளார். இந்நிலையில் அரவிந்தா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் பணிபுரியும் மாதவரம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரவிந்தாவுக்கு இன்ஸ்பெக்டர்கள் காளிராஜ் மற்றும் ஸ்ரீஜா முன்னிலையில் கோலாகலமாக வளைகாப்பு விழா நடத்தினர்.
7 வகையான உணவுகள், 9 வகையான பழங்கள், வெள்ளி வளையல், பட்டு புடவை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சீர்வரிசை வைத்து முறைப்படி அரவிந்தாவை அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்து மாலை அணிவித்து ஒருவர் பின் ஒருவராக அந்தப் கர்ப்பிணி பெண் காவலருக்கு கண்ணங்களிலும் கைகளிலுல் சந்தனம் பூசி நெற்றியில் திலகம் வைத்து, கைகளில் வளையல் அணிவித்து , உணவுகளை ஊட்டி , மலர்தூவி , ஆரத்தி எடுத்து அவரை மனதார வாழ்த்தினார்கள். காவல் நிலையத்தில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியால் அப்பகுதி மக்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.
சாலையில் முந்தி செல்வதில் தகராறு-லாரி ஓட்டுனரை கத்தியால் இளைஞர்
சென்னை செங்குன்றம் பாடிய நல்லூர் , பாலகணேசன் நகரை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (29). இவர் லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் மாதவரம் மஞ்சம் பாக்கம் ரவுண்டானா , 200 அடி சாலையில் லாரியை ஓட்டி சென்ற போது இவரது லாரியை இருசக்கர வாகனத்தில் வந்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் பொன் பாண்டியன் (39) என்பவர் லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது சாலையில் வழியில்லாமல் திணறினார். இதனால் ஆத்திரமடைந்த பொன் பான்டியன் லாரியை மடக்கி நிறுத்தி லாரி டிரைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
இருவருக்கும் நடந்த வாக்கு வாதத்தில் பொன் பான்டியன் கையில் இருந்த சிறிய கத்தியால் டிரைவரை வயிற்றுப் பகுதியில் குத்தினார். காயமடைந்த அவரை அருகில் உள்ளோர் உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்களால் அவருக்கு 6 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் மாதவரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பொண் பான்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion