மேலும் அறிய

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை
 
செங்கல்பட்டு மாவட்டம், திருமனி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்வதை தவிர வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கு தயாரிப்பது, மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள், சட்டிகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிப்பது ஆகியவற்றின் மூலம் இவர்களது வாழ்க்கை தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து கொள்ள, இவர்கள் போராடி வருகின்றனர்.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
சிக்கல் ஏற்பட்டது
 
வழக்கமாக பருவமழை காலத்தில் இவர்கள் மண்பாண்டங்கள் செய்வதில்லை. மார்கழி மாதம் பனி பெய்யும் காலம் என்பதால் கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்பு, பொங்கல் பானைகள் தயாரிக்க தொடங்குவார்கள். பொங்கல் பானை தயாரிக்க தொடங்கும் காலத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அவர்கள் மண்பாண்டங்களை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
 

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
சிரமமான சூழ்நிலை
 
மண்பாண்டம் செய்வதற்கு மண் பதப்படுத்த வேண்டும் என்றால், குறைந்தது 4 நாட்கள் நல்ல வெயில் அடிக்க வேண்டும். ஆனால் 2 நாட்கள் மழை பெய்வதும், 2 நாட்கள் வெயில் அடிப்பதுமாக இருந்ததால், அவர்களால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது. மழை பெய்து சற்று ஓய்ந்துள்ள காரணத்தால், கடந்த 2 நாட்களாக அவர்கள் மண்ணை பதப்படுத்தி மண்பாண்டங்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.
 
சூளையில் இட்டு சுட்டு
 
இந்நிலையில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதுவரை பொங்கல் பானைகள் செய்யும் வேலையை தொடங்கவே இல்லை. அந்த வேலையை தொடங்கியுள்ள சிலரும், குறைந்த எண்ணிக்கையிலேயே பானைகள் தயார் செய்துள்ளனர். மண் பாண்டங்களை சூளையில் இட்டு சுடுவதற்கு போதுமான அளவு பானைகள் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் 10 நாட்களாவது ஆகும். அதன் பிறகு சூளையில் இட்டு சுட்டு எடுக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் பானைகள் தயாராகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
பாதிக்கப்படும் நிலை 
 
பொதுவாக தயார் செய்த பானைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய வேண்டும் என்றால், குறைந்தது பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாக பானைகள் தயாராக வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இயற்கை கை கொடுக்காததால் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பலர் தற்போது சில்வர் மற்றும் வெண்கல பாத்திரங்களை பயன்படுத்தியே பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
 
மண்பாண்ட தொழில் காணாமல் போய்விடுமோ?
 
எனவே பொதுமக்கள் மண்பானையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் குடும்பத்திற்கு ஒரு பானை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்து, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தொடர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் மண்பாண்டங்கள் தயாரிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் தயார் செய்து வைத்துள்ள மண்பாண்ட பொருட்களுடைய விற்பனை மந்தம் ஆகியவற்றின் காரணமாக காலப்போக்கில் மண்பாண்ட தொழில் காணாமல் போய்விடுமோ? என்ற அச்சம் உள்ளதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
மண்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களை அரசு ஊக்கப்படுத்தி, தொடர்ந்து மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய வைக்காவிட்டால், இந்த சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினர் மண்பாண்டம் என்ற ஒன்று இருந்ததை அறியாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசு உரிய திட்டங்கள் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் காப்பதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளில் மண்பாண்ட தொழில் நலிவடையாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
Brezza vs Venue EMI Comparison: மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
மாருதி பிரெஸ்ஸா - ஹூண்டாய் வென்யூ கார்களுக்கான EMI-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன.? எது பெஸ்ட்.?
Embed widget