மேலும் அறிய

செங்கல்பட்டு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி.. காப்பாற்றிய ஊழியர்கள்..

செங்கல்பட்டு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற நோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் 3வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் காலையில், ஒரு வாலிபர் படுத்திருந்தார். அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி.. காப்பாற்றிய ஊழியர்கள்..

 இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பற்றி விசாரித்தபோது, கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் விஜயா. இவரது மகன் சந்துரு (எ) சந்திரபாபு (30) என தெரிந்தது. அவருக்கு, வலிப்பு நோய் ஏற்படுவதால், குடும்பத்தினர் விரக்தியடைந்தனர்.

இதனால் சந்துரு குடும்பத்தினரின் வேதனையை உணர்ந்து, வீட்டை விட்டு வெளியேறி, சாலையில் தங்கியிருந்தார் என தெரிந்தது. ஆனாலும், அவருக்கு வலிப்பு நோய் இருந்ததால், அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனையின் 3வது மாடிக்கு சென்ற சந்துரு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

செங்கல்பட்டு மருத்துவமனையின் 3-வது மாடியில் இருந்து தற்கொலைக்கு முயன்ற நோயாளி.. காப்பாற்றிய ஊழியர்கள்..
 அப்போது, அங்குள்ள ஒரு ஸ்லாப்பில் விழுந்த அவர், அந்தரத்தில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்தனர். இதையடுத்து அவரை மீட்டு, மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். புகாரின்படி செங்கல்பட்டு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு வலிப்பு நோய் இருந்த காரணத்தால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதன் காரணமாகவே மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருந்தும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை காப்பாற்றியதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தனர்.

Suicidal Trigger Warning

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060). Poi

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Slams DMK:  “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
EPS Slams DMK: “மக்கள் நலன் வேண்டாம்” சுரங்கம் ஏலம் மட்டும் வேண்டுமா? பாயிண்ட் பிடித்து பேசிய ஈபிஎஸ்
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
100 நாள் வேலை கேட்டு வந்த சீமானின் தாய்; இளையான்குடியில் பரபரப்பு
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
Anna Unversity: தமிழ்நாட்டில் இப்படியா..! அண்ணா பல்கலை.,யில் மாணவிக்கு பாலியல் தொல்லை - கொதித்தெழும் அரசியல் தலைவர்கள்
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
மு.க.ஸ்டாலின் பக்கம் சாயும் அன்புமணி? 2026 தேர்தலுக்கு இப்பவே அச்சாரம் போட்ட பா.ம.க.!
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
CM Stalin Secretary:ஆள விடுங்க..! நீண்ட விடுப்பில் கிளம்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் செயலாளர்- காரணம் என்ன?
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
’’பொதுத்தேர்வுக்கு முன் பாத பூஜை எனும் பெயரில் கொடுமை’’ பள்ளிகளுக்குப் பறந்த உத்தரவு!
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
New Governors: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - அப்ப தமிழ்நாட்டுக்கு? குடியரசு தலைவர் அறிவிப்பு
Embed widget