மேலும் அறிய
மனைவி இறந்த அடுத்த நொடியே கணவன் மரணம்.. சாவிலும் இணைபிரியா தம்பதி..சோகத்தில் மூழ்கிய கிராமம்..!
திருக்கழுக்குன்றம் அருகே மனைவி இறந்த துக்கம் தாளமால் அழுதபடியே அவர் மீது விழுந்து கணவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![மனைவி இறந்த அடுத்த நொடியே கணவன் மரணம்.. சாவிலும் இணைபிரியா தம்பதி..சோகத்தில் மூழ்கிய கிராமம்..! Chengalpattu 80-year-old husband fell on his wife near Thirukkalukkunram while crying in grief. Both the bodies were kept in the same pit and the relatives cremated them. மனைவி இறந்த அடுத்த நொடியே கணவன் மரணம்.. சாவிலும் இணைபிரியா தம்பதி..சோகத்தில் மூழ்கிய கிராமம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/798a73ef3f32d2c81856ea275a52765d1692728080146113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேவகி -- தேவராஜ்
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது80). இவரது மனைவி தேவகி (வயது75). இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் தேவராஜ், தேவகி தம்பதியினர் இருவரும், எடையூரில் தனியாக வசித்து வந்தனர். சிறு வயது முதல் விவசாயம் செய்து வரும் தேவராஜ் 80 வயதை கடந்தும் முள்ளங்கி மற்றும் தேங்காய், கீரை,முருங்கை ஆகியவைகளை தன் விவசாய நிலத்தில் சாகுபடி செய்து, அதனை சைக்கிளில் வைத்து ஊர், ஊராக சென்று, வியாபாரம் செய்து வந்தார்.
சாவிலும் பிரியா தம்பதிகள்:
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த மனைவி தேவகி திடீரென நேற்று, இறந்து போனார். மனைவி இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அவர் தனது மனைவி உடலை பார்த்து, பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து 'உன்னை விட்ட எப்படி நாள் இனி வாழ்வேன்' என மனைவி உடலை பார்த்து தொடர்ந்து தேம்பி, தேம்பி, அழுத வண்ணம் இருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் உறவினர்கள் அனைவரும் தேவகி உடலை சூழந்திருக்க தேவராஜ் திடீரென மனைவியின் உடல் மீது மயங்கி விழுந்து இறந்து போனார்.
இதனால் மிகுந்த மன வேதனைக்குள்ளான உறவினர்கள் சாவிலும் இணைபிரியாத முதிர்ந்த வயதுடைய தம்பதியர் இருவரின் உடலை பார்த்து அந்த கிராம மக்களே கதறிஅழுதனர். பிறகு இருவரது உடல்களையும் அக்கிராமத்தில் உள்ள இடுகாட்டில் ஒரே குழியில் அடக்கம் செய்தனர். இளம் வயது தம்பதியினர் போல் வாழ்ந்து, சாவிலும் இணைபிரியாத தேவராஜ்-தேவகியின் மரணம், எடையூர் கிராமத்தில் கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion