மேலும் அறிய

Chembarambakkam : இன்று செம்பரம்பாக்கம் ஏரி நீர்வரத்து நிலை என்ன? பிற ஏரிகளின் நிலவரம் என்ன?

Chembarambakkam lake: சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி 

சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்கு மிக முக்கிய ஏரிகளில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்ந்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீர் சென்னை மாவட்டத்தில், பாய்கின்ற அடையாறு ஆற்றில் கலப்பதாலும் செம்பரம்பாக்கம் ஏரி முக்கியமாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஏரிகளில் இருந்து மழை காரணமாக தண்ணீர் வருவது வழக்கம்.

செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்

செம்பரபாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி, தற்பொழுது நீர் இருப்பு 22.06 அடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்தம் 3.645 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்பொழுது தண்ணீரின் அளவு 3.132 டிஎம்சி ஆக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து ஆனது 188 கன அடியாக உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படும் அளவு 188  கன அடியாக உள்ளது (குடிநீருக்காக 104  கன அடி நீர், சிப்காட் தேவைக்காக 3 கனஅடி நீர், 50 கனஅடி நீர வெளியேற்றப்படுகிறது, பிற காரணங்களுக்காக 31 கன அடி நீர் ). தொடர்ந்து அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்  மட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

காஞ்சி, செங்கை மாவட்ட ஏரிகள் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 30 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 13  ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 ஏரிகளில் 4 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட 93 ஏரிகளில் 7 ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் ஏரிகள் மிக வேகமாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்திரமேரூர் ஏரியின் நிலவரம் என்ன ?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக உத்திரமேரூர் ஏரி இருந்து வருகிறது. உத்திரமேரூர் ஏரியின்  மொத்த அடி 20 அடி அதில் 18 புள்ளி 50 அடியை தண்ணீர் எட்டியுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவில் 92.50 சதவீதம் தண்ணீர் எட்டி உள்ளது. உத்திரமேரூர் ஏரி 90% க்கு மேல் நிரம்பியுள்ளதால் கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

 வானிலை முன்னறிவிப்பு

06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Breaking News LIVE: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்
Breaking News LIVE: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Breaking News LIVE: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்
Breaking News LIVE: இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
Thalapathy Vijay: விஜய் என்னை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்தாரு.. ஆனால் சிம்புதேவன்.. புலம்பும் பி.டி.செல்வகுமார்!
Thalapathy Vijay: விஜய் என்னை உயரத்தில் ஏற்றி அழகு பார்த்தாரு.. ஆனால் சிம்புதேவன்.. புலம்பும் பி.டி.செல்வகுமார்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
Embed widget